ETV Bharat / state

"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையை மறைக்க முயற்சி "- அண்ணாமலை விமர்சனம்! - BJP Annamalai

BJP Annamalai: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு உள்ளது, இதை பாஜக அரசியல் கொலையாக கருதுகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 8:47 PM IST

திருச்சி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் உழவர் சந்தை மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சி வந்தார்.

அண்ணாமலை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ள தமிழக அரசு தொடர்ந்து உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பாஜக அரசியல் கொலையாக கருதுகிறது. இந்த கொலை சம்பவத்தில் பெரிய மர்ம முடிச்சு உள்ளது. முக்கிய குற்றவாளியை என்கவுண்டர் செய்துவிட்டு அவர்தான் திட்டம் தீட்டியதாக தெரிவிப்பார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினரும் சிக்கி உள்ளனர். இதனால் உண்மையை மூடி மறைக்க போலீசார் முயற்சி செய்கின்றனர். வழக்கை அவசர கதியில் முடிக்க காரணம் என்ன? ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் தொடர்பாக பல கேள்விகள் எழுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கடிதம் எழுதி இருக்கிறேன். அதன் அடிப்படையில், தமிழக உள்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக இப்போது தான் என்கவுண்டர் செய்யும் நிலையில், எதிராளி துப்பாக்கியால் சுட முயன்றதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். சரணடைந்தவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது கேள்வியாக உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தெளிவான விளக்கங்களைக் கொடுத்து விட்டால், சென்னை அரசியலின் நிலை மாறி ஜனநாயக அரசியல் வந்து விடும். ரவுடிகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இது போன்ற கொடூர கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.

பிஎம் கிசான் திட்டம்: கடந்த 2019ஆம் ஆண்டு சிறு, குறு விவசாயிகள் நலனுக்காக பிஎம் கிசான் திட்டத்தை பிரதமர் கொண்டு வந்தார். தமிழகத்தில் 43 லட்சம் விவசாயிகள் அந்தத் திட்டத்தில் பயன்பெற பதிவு செய்தனர். இதுவரை 17 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது படிப்படியாக குறைந்து இந்தத் திட்டத்தில் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகின்றனர். இதில் ஏழு லட்சம் போலி விவசாயிகள் இணைக்கப்பட்டு ஊழல் நடந்துள்ளது.

காவிரி பிரச்னை: தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை. அதை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி போராட்டம் நடத்தப்படுகிறது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு, பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் ஒரு சுற்று கூட பாக்கி இல்லாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. மேகதாதுவில் அணை பிரச்னை கிளம்பிய பிறகுதான் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

காவிரி தண்ணீர் கிடைக்காமல் கடந்த ஆண்டு தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரியான விளைச்சல் இல்லாததால் மத்திய உணவு கழகம் அரிசி கொள்முதலை குறைத்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிறது. தமிழக அரசோ, முதல்வரோ, காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களோ கர்நாடகாவுக்குச் சென்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசவில்லை.

அடிப்படை முயற்சிகளையும் செய்யாமல் சதி நடப்பதாக, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழக முதல்வர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இருந்தாலும் அதை ஜனநாயக முறைப்படி தீர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் தெளிவாக இருக்கிறார். இதை தமிழக அரசு புரிந்து கொள்ளாத வரை ஒன்றும் செய்ய முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் துடிக்கத் துடிக்க வெட்டி கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு; நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி - Armstrong murder video

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.