ETV Bharat / state

12 வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு - நடவடிக்கை.. பார் கவுன்சில் அதிரடி! - BAR COUNCIL

வழக்கறிஞர் தொழிலுக்காக விதிகளை மீறி செயல்பட்டதால் 12 வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு பார் கவுன்சில்
தமிழ்நாடு பார் கவுன்சில் (Credits - BCTNPY Official Site)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 9:46 PM IST

சென்னை: விதிகளை மீறி செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கைக்குழு பரிந்துரையின்படி, 12 வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு - புதுச்சேரி பார்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் சாம்ராஜ் ஒரு வருடம் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பையா பாண்டியன் 2 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது உமர் முக்தர் 5 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சட்டப்பேரவையை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்துவதாக கூறினீர்களே? - சபாநாயகரை நோக்கி இபிஎஸ் கேள்வி!

கன்னியாகுமரியை சேர்ந்த பிபீன் ஞானகுமார், ஜெயராமன், கிறிஸ்து பிரிட்கெஜ் ராஜ், ஜோசப் ராஜா, ஆடீலின் தாவே, ஜெயா சண்முகம், பெசிலின் ஜெகதீஷ் ஆகிய 7 வழக்கறிஞர்கள் 5 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் வழக்கறிஞர் முத்துக்குமரனுக்கு எச்சரிக்கையும், சேலத்தை சேர்ந்த ராமமூர்த்திக்கு எச்சரிக்கையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் 1 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.