ETV Bharat / state

சூறைக்காற்றுடன் மழை: தாளவாடியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம்! - Erode Rain

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 12:22 PM IST

Erode Rain: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், ரூ.20 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் நேந்திரம் ஜி9 வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது.

banana-trees-were-broken-and-damaged-due-to-strong-winds-and-heavy-rain-in-erode
தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை: ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம்! வேதனையில் விவசாயிகள்!

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், ரூ.20 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் நேந்திரம் ஜி9 வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் கடந்த மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் விலைக்குத் தாளவாடி மலைப் பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகக் கோடை மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகக் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும், மதியம் 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் பெய்த சூறைக்காற்றால் காற்றின் வேகம் தாங்காமல் 10 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. நேற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்த நேந்திரம், ஜி9 வாழைகள் முறிந்து விழுந்தன சேதமடைந்தன. ராமாபுரம் தீபு, சுந்தரமூர்த்தி, தொட்டகாஜனூர் ராசு, சிவண்ணா, இக்கலூர் சண்முகம் என 7-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தோட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 5 ஆயிரம் நேந்திரம், ஜி9 வாழைகள் சேதமடைந்ததால், ஏக்கர் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்த வாழைகள் வீணானதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

பலத்த காற்று காரணமாக வாழைகள் மட்டுமின்றி தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் சாலையோர மரமும் முறிந்து விழுந்தது. மேலும், ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் 6 மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களில் பெய்த பலத்த மழையால் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், வாழை சேதத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்.. பவானிசாகர் அணையில் பதுங்கியிருக்கும் மர்மம்! - BHAVANISAGAR DAM Temple

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.