ETV Bharat / state

"8 வருட கனவு இன்று நனவாகிடுச்சு.." மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்த பாலா! - KPY Bala sponsored a three wheeler - KPY BALA SPONSORED A THREE WHEELER

KPY Bala: ஈரோட்டில் மாற்றுத்திறனாளி ஒருவர் வாகனம் கேட்டு நடிகர் பாலாவை அனுகிய போது, உடனடியாக அவருக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கி கொடுத்த அவருக்கு வெகுவாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஸ்கூட்டி வாங்கி கொடுத்த KPY பாலா
ஸ்கூட்டி வாங்கி கொடுத்த பாலா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 9:58 PM IST

Updated : Jul 11, 2024, 12:46 PM IST

ஈரோடு: ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரேமா. மாற்றுத்திறனாளியான இவர் ஈரோடு, ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். 3 வயது முதல் போலியோவால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான இவர், தினந்தோறும் வீட்டில் இருந்து 2.கி.மீ தூரம் நடந்து சென்று பேருந்து மூலம் வேலைக்குச் சென்று வருகிறார்.

மேலும், அரசு சமூக நலத்துறையில் கடந்த 8 வருடங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் கேட்டு விண்ணப்பம் செய்த நிலையில் நான்குமுறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்வதில் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த நடிகர் சின்னத்திரை புகழ் பாலாவை உணர்வுகள் அமைப்பு மூலம் தொடர்பு கொண்டு வாகனம் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து, அப்பெண்ணின் மனுவை பெற்றுக் கொண்ட பாலா நிகழ்ச்சிக்குச் சென்று விட்டார். பின்னர், அப்பெண்ணும் வீட்டிற்குச் சென்று விட்டார். இதற்கிடையில், நிகழ்ச்சி முடிவடைவதற்குள் நடிகர் பாலா உணர்வுகள் அமைப்பினரிடம் ரூ.50 ஆயிரம் நிதி கொடுத்து, மாற்றுத்திறனாளி வாகனத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.

பின்னர், நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு, KPY பாலா பிரேமா வீட்டிற்கு நேரடியாகச் சென்று வாகனத்தை வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இதனால், ஆனந்த கண்ணீருடன் பாலாவுக்கு மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது கணவர் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து, பாலாவை வீட்டிற்குள் அழைத்து தண்ணீர் வழங்கி உபசரிப்பு செய்தார் அப்பெண்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா, "அரசுக்கு அறிவுரை வழங்கும் வகையில் தகுதி இல்லை, என்னிடம் இருந்தால் உதவி செய்வேன். பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். முன்பு வழங்கிய இலவச ஆம்புலன்ஸ் சேவை நல்ல முறையில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது" என்றார்.

இது குறித்து பிரேமா கூறுகையில், “44 வயது காரணமாக பேருந்தில் பயணம் செய்ய முடியவில்லை. அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலமாகவும் வாகனம் கேட்டும் கிடைக்கவில்லை. இரட்டை பெண் குழந்தைகள் வைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு சிரமத்தைச் சந்தித்து வரும் நிலையில், பாலாவின் பெரும் உதவி புதிய நம்பிக்கையாக உள்ளதாக” தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைதியாக நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணும் மையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு! - Vikravandi by election polling

Last Updated : Jul 11, 2024, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.