சென்னை: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் வில்சன் என்பவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் தங்களுடைய சங்கம் 2010ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி கோரிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி பரம்பொருள் பவுண்டேஷன் சார்பாக அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு சொற்பொழிவாற்றியுள்ளார். அப்பொழுது மாணவ மாணவிகளிடம் மாற்றுத்திறனாளிகள் பற்றி அவதூறான வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் கை மற்றும் கால்கள் இல்லாமல் பிறப்பதற்கு காரணம் முன் ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவ புண்ணியம் தான் காரணம். இந்த ஜென்மத்தில் அவர்களுக்கு இது போன்ற ஒரு பிறப்பு இருக்கின்றது என மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் நோக்கத்தில் மாணவ மாணவிகளும் பேசியுள்ளார்.
இது தொடர்பாக மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "என் எல்லைக்கு வந்து அவமானம்; சும்மா விடமாட்டேன்" - மகாவிஷ்ணு விவகாரத்தில் அமைச்சர் அதிரடி”