திண்டுக்கல் : திருப்பதி தேவஸ்தானத்திற்கு, திண்டுக்கலில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய் தரமானதே என நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் லெனி மற்றும் கண்ணன் கூறி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஜூன், ஜூலை என இரண்டு மாதங்கள் தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பியுள்ளோம். தற்போது தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை கிடையாது. தற்போது எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, எங்களுடைய தயாரிப்பில் குறை இருக்கிறது என்று செய்தி வருகிறது.
எங்களது நெய் எல்லா இடத்திலும் கிடைக்கிறது. அதனை நீங்கள் டெஸ்ட் பண்ணலாம். நெய்யின் தரத்தில் எந்த குறைபாடும் இருக்காது. எங்கள் நிறுவனத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எங்களது நிறுவனத்தின் பொருள்களை எடுத்து டெஸ்ட் செய்து கொள்ளலாம்.
கடந்த 25 வருடத்திற்கும் மேல் இந்த துறையில் நாங்கள் இருக்கிறோம். இந்த மாதிரி எங்களது பொருட்களின் தரத்தை யாரும் இப்படி வெளிப்படுத்தியது கிடையாது. எங்களது நிறுவனத்தின் தயாரிப்பின் சார்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம். எங்களது பொருட்கள் பல இடங்களில் விற்பனைக்காக உள்ளது. அங்கு சென்று அவற்றை தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க : திருப்பதி லட்டு விவகாரம்; வெளியான ஆய்வக அறிக்கை.. YSRCP-க்கு TDP கடும் கண்டனம்! - Tirupati Laddu controversy
எங்களது ஆய்வுக்கூடத்தின் அறிக்கை எங்களிடம் உள்ளது. மேலும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும்போது தர கட்டுப்பாட்டு துறை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதில், எங்களது ஆய்வு அறிக்கையையும் அனுப்பியுள்ளோம்.
லட்டு தயாரிப்புக்காக மட்டுமே நெய் அனுப்பப்பட்டது. அங்கு ஒப்பந்தம் போடப்பட்டு நெய் அனுப்பப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பியதில் பல பேர் உள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும் நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய பின்பும் மீண்டும் பரிசோதனை செய்துள்ளோம். தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது. எங்கள் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானமும் ஆய்வு செய்ததில் எந்த குறைகளும் இல்லை.
எங்களிடம் எங்களது ஆய்வுக்கான அறிக்கைகளும், திருப்பதி தேவஸ்தானத்தின் ஆய்வறிக்கைகளும் உள்ளன. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஐஎஸ்ஐ அக்மார்க் தரும் அதிகாரிகளும் எங்களிடமிருந்து சாம்பிள் எடுத்து சென்று ஆய்வு செய்தனர். அதிலும், இதுவரை எந்த ஒரு குறைகளும் இல்லை" என்று லெனி மற்றும் கண்ணன் தெரிவித்தனர்.