ETV Bharat / state

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது மேலும் ஒரு வழக்கு.. ஜூலை 31 வரை நீதிமன்றக் காவல்! - mr vijayabhaskar case - MR VIJAYABHASKAR CASE

MR vijayabhaskar case: சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 4:02 PM IST

கரூர்: கரூரில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால் கேரளாவில் வைத்து கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த உறவினர் பிரவீன் என்பவரையும் கைது செய்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதித்துறை எண் 1ல் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, நீதிபதி பரத்குமார் ஜூலை 31ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று வாங்கல் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பிரகாஷ் அளித்த புகார் அடிப்படையில், ஜூன் 22ஆம் தேதி பதிவு செய்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய சகோதரர் சேகர் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, இன்று கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2ல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிபதி மகேஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விஜயபாஸ்கரை ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, திருச்சி மத்திய சிறைக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக, கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அறிந்து அதிமுகவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும், சிபிசிஐடி விசாரணையில் கடந்த ஜூலை 18ஆம் தேதி வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய பிருத்விராஜ் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று சிபிசிஐடி வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டு ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "அரசியல் பழிவாங்கல்; நீதிமன்றத்தில் சந்திப்பேன்" - சிறையில் அடைக்கப்படும் முன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.