ETV Bharat / state

புவிசார் குறியீட்டில் முதன்மை வகிக்கும் தமிழகம்..வேளாண் பட்ஜெட் அறிக்கையில் வெளிவந்த சிறப்பு அறிவிப்புகள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 5:51 PM IST

TN Agri Budget 2024: தமிசக சட்டப்பேரவையில் இன்று(பிப்.20) தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், கூடுதலாக 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று(பிப்.19) பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று(பிப்.20) வேளாண் துறைக்கென்ற தனி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம். மொத்தம் 42,281 கோடி மதிப்பில் 2024-25ஆண்டில் விவசாயம் மற்றும் விளை பொருட்களுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நீர்ப்பாசன அமைப்புகள், மண்வளம் மீட்டெடுத்தல், வேளாண் கண்காட்சி, ஆடு, கோழி வளர்ப்பு, கரும்பு விவசாயிகளுக்கு மாணியம் என பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய தனிப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த திட்டங்களில் ஒன்றாக தமிழ்நாட்டில் மேலும் 10 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 30லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரையில் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இந்தியாவிலேயே அதிகளவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

இன்று வெளியிடப்பட்ட வேளாண் பட்ஜெட் அறிக்கையில், "புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை, ஏற்றுமதி அளவு ஆகியவற்றை அதிகரிக்க உதவும். கடந்த மூன்று ஆண்டுகளில், 25வேளாண் விளைப்பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதேப் போல் 2024-25ஆண்டில் கூடுதலாக 10பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க 30லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள், விவசாய விளை பொருட்கள், கைவினைப் பொருட்கள், இயற்கையாகப் பெறக்கூடியப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என ஒரு பகுதியில் தனித்துவம் கொண்டு உருவாகும் பொருளை உலகளவில் சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த புவிசார் குறியீடு.

அந்தந்தப் பகுதியில் தனித்துவம் நிறைந்து உருவாகும் பொருட்களை அங்கிகரீக்கவும் அதன் பெருமையை புகழ்பாடவும் 1999 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 2002 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் சேலம் சுங்கடி, காஞ்சிப்பட்டு, மதுரை சுங்குடி சீலை, தஞ்சாவூர் ஓவியம், திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலைமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை மல்லி, சோழவந்தான் வெற்றிலை, மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஈரோடு மஞ்சள் என மொத்தம் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது, கூடுதலாக சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதி பாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி இலை, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, கரூர், திண்டுக்கல், திருப்பூர் செங்காந்தள் விதை உள்ளிட்ட10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறவுள்ளதாக பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முதலில் காஞ்சிபுரம் பட்டுக்குத்தான் புவிசார் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது புவிசார் குறியீட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.