ETV Bharat / state

"முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழக மக்களுக்கு ஒரு பயனும் இல்லை" - அண்ணாமலை!

Annamalai Criticism On CM Foreign Trip: முதல்வர் வெளிநாட்டு பயணம் என்று மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார் என்றும் அதனால் தமிழக மக்களுக்கு ஒரு பயனும் இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

annamalai criticism on tamil nadu cm foreign trip
தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து அண்ணாமலை விமர்சனம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 11:00 PM IST

தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து அண்ணாமலை விமர்சனம்

திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டந்தோறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 190 வது தொகுதியாக இன்று (பிப்.09) யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 191-வது தொகுதியாக திருவள்ளூருக்கு வந்த அவருக்கு சிவிஎன் சாலையில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து காமராஜர் சிலை வழியாக, ஜே.என்.சாலை, ராஜாஜி சாலை, தேரடி சாலை, பஜார் வீதி வரை யாத்திரையாகச் சென்ற அண்ணாமலைக்கு சாலையின் இருபுறமும் கூடியிருந்த பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

யாத்திரை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "கடந்த 67 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மருத்துவ படிப்புக்கான இடம் 57 ஆயிரத்தில் இருந்து, 1 லட்சத்து 8 ஆயிரமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தார். 3-வது முறையாக மோடி ஆட்சியில் அமருவார்.

இந்தியாவில் மு.க.ஸ்டாலின் பகுதிநேர முதலமைச்சர். கேட்க வேண்டிய கேள்வி மற்றும் பேச வேண்டிய விசயத்தையும் துண்டு சீட்டில் முதல்வர் பார்த்துப் படிக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் உள்ளது. சமூக நீதி பாதுகாப்பு படுதோல்வி அடைந்துள்ளது" என்று குற்றம்சாட்டினார்.

இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் வெளிநாடு பயன் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலமைச்சர் கொண்டுவந்ததாகச் சொல்லியிருக்கும் பணம் 3440 கோடி ரூபாய். இதேபோல கடந்த முறை துபாய் சென்றுவந்தபோது, 6100 கோடி முதலீடு வந்ததாகக் கூறினார். ஆனால், தற்போதுவரை 6 ரூபாய் கூட வரவில்லை.

மேலும், இவர்கள் பணம் கொண்டுவருவதற்காகச் செல்லவில்லை, தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொண்டுவருவதற்காகச் சென்றதுதான் துபாய் பயணம். முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்து பத்து நாளில் ஸ்பெயின் செல்வதற்கான காரணம் என்ன? இதில் பல மர்மங்கள் உள்ளது.

மேலும், முதலீடு செய்வதாகக் கூறிய நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள், முதல்வர் கூறியது அனைத்தும் அந்தந்த நிறுவனங்களின் விரிவாக்க முதலீடுகள், முதல்வர் வெளிநாட்டு பயணம் என்று மாயத்தொற்றத்தை ஏற்படுத்துகிறார். இதனால் தமிழக மக்களுக்கு ஒரு பயனும் இல்லை." என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: ஏற்கனவே திதி கொடுத்தவர்களின் பொருட்களை வைத்து பூஜை; தட்டி கேட்டவர்களை தரக்குறைவாக பேசிய அர்ச்சகரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.