ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராகி விளக்கம்! - Settlement gratuity case - SETTLEMENT GRATUITY CASE

Settlement gratuity case: ஓய்வூதிய பணபலன்களை வழங்காதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 3:37 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை எனக்கூறி அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக ஓய்வு பெற்ற பேராசிரியர் தேவதாஸ் மனோகரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ்க்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு அமர்வில் இன்று (ஜூலை 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் நேரில் ஆஜரானார்.

அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவினாஷ் வாத்வானி, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதன் காரணமாகவும், நோட்டீசில் பெயர் பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததாலும் பதிவாளர் அன்றைய தினம் ஆஜராக இயலவில்லை என கூறினார்.

மேலும், மனுதாரர் மீதான லஞ்ச வழக்கு நிலுவையில் உள்ளதால், அவருக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (Gratuity) தொகையை வழங்க இயலாது என தெரிவித்தார். அதனை தவிர்த்து மற்ற ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, பணிக்கொடை தவிர்த்து இதர ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.