ETV Bharat / state

"டிரக் தமிழ்நாடு திட்டத்தை கைவிட உத்தரவிடுக" - சென்னை ஐகோர்ட்டில் விலங்குகள் நல ஆர்வலர் மனுத்தாக்கல்!

தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ள 'Trek Tamilnadu' என்ற மலையேற்ற பயணத் திட்டத்தை கைவிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 5:13 PM IST

சென்னை : தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 40 மலையேற்ற பயணத் திட்டத்தை (டிரக் தமிழ்நாடு) அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டுமென விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற பயணத்தை அனுமதித்தால் வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் 38 யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் மலையேற்றத்தை அனுமதிக்கும் போது அதிக எண்ணிக்கையில் மனித நடமாட்டம் ஏற்படும். அதன் காரணமாக விலங்குகள் உணவு தேடும் நடவடிக்கை, இனப்பெருக்க நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.

இதையும் படிங்க : மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடையா? ஐகோர்ட் உத்தரவு!

மேலும், மனிதர்கள் மூலம் வன விலங்குகளுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மலையேற்றத்திற்கு செல்பவர்கள் எடுத்துச் செல்லும் உணவுகளின் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வனப்பகுதியில் விட்டு திரும்பக்கூடும் என்பதால் வனம் மாசடைய வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக விலங்குகள் காயமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, வனப்பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மலையேற்ற பயணத் திட்டத்தை கைவிடும் படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.