ETV Bharat / state

"எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சிஎஸ்கே அணிக்காக விளையாடியது" - சிவம் துபே பேச்சு! - Shivam Dube in VIT

Shivam Dube: வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.29) மாரத்தான் போட்டிகள் நடைபெற்ற நிலையில், விழாவின் சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே கலந்து கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 6:48 PM IST

"எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருனம் சிஎஸ்கே அணிக்காக விளையாடியது" - விஐடியில் சிவம் துபே பேச்சு!

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில், இன்று (பிப்.29) மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சிவம் துபே கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த ரிவேரா எனப்படும் கலாச்சார திருவிழா, வரும் மார்ச் 3ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகள், மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே, "மாணவ, மாணவிகள் தங்களது இலக்கை நோக்கி பயணித்தால் நிச்சயம் வெற்றி அடையலாம். நீங்கள் எப்போதும் உங்களது தாய் தந்தையரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமும், தருணமும் சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்காக இளம் வயதில் விளையாடியதுதான். வெற்றியோ, தோல்வியோ அவைகளை படிகளாக எடுத்துக் கொண்டு, வாழ்க்கையின் இலக்கை நோக்கிச் செல்லுங்கள்" என்றார்.

இதையும் படிங்க: ஹாலிவுட்டில் ரீமேக்காகும் "த்ரிஷ்யம்" படம் - முதல் இந்திய படம் என சிறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.