ETV Bharat / state

விஜய் - சீமான் - நான்.. அமீர் கொடுத்த அரசியல் அப்டேட்! - Ameer about Vijay

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 3:54 PM IST

Ameer: பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்தார்கள் என்பதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தது தான் வேதனை அளிக்கிறது. அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாக பார்க்க வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

ameer
விஜய் சீமான் மற்றும் அமீர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருச்சி சுப்பிரமணிபுரம் பகுதியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் அமீர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதைகள் பற்றிய படம் அதிக அளவில் வருகிறது என்ற கேள்விக்கு, கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால், திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க இயலாது.

இயக்குநர் அமீர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஜாபர் சாதிக் விவகாரம்: இந்த வழக்கை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. நீதிமன்றத்தில் நீதியரசர் விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்தது. ஆகையால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மற்றபடி எனக்கு இந்த வழக்கை பற்றி எதுவும் தெரியாது.

அரசியல் வருகை: அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அதுதான் எனக்கு உள்ளுணர்வு சொல்கிறது.

திராவிடம்: திராவிடம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்தால் மட்டுமே திராவிடம் வேண்டும், வேண்டாம் என்று தெரியவரும். ஆரியத்திற்கு எதிரான சொல் தான் திராவிடம் ஆகும். திராவிடம் என்பது நம்முடைய மண், ரத்தம் உணர்வுகளில் கலந்து இருப்பது. ஆகையால் அனைவரும் திராவிடர்கள் தான். திராவிடச் சிந்தனைகள் உள்ளவர்கள் தான். பாசிச அரசியலுக்கு எதிராக யாரெல்லாம் அரசியல் செய்கிறார்களோ அது திராவிட அரசியலாகும். பாசிசத்திற்கும், ஆரியத்திற்கும் எதிராக செய்யக்கூடிய அரசியல் திராவிட அரசியல் எனப்படும்.

சட்டம் - ஒழுங்கு: சட்ட ஒழுங்கு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சரியாகத் தான் உள்ளது. ஒரு வெள்ளை வேஷ்டியில் 4-5 கரைகள் இருந்தால் எப்படி நம் கண்களுக்கு தெரியும். அதுபோல தான் சட்ட ஒழுங்கு எல்லா காலத்திலும் சரி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்ட ஒழுங்கைப் பற்றி மட்டுமே கூற முடியும். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என பேசுவது ஒரு அரசியலாகும்.

விஜய் அரசியல் பயணம்: விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் நான் செல்வேன்.

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: மத்திய அரசின் நிலைப்பாடு இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டை புறக்கணித்தார்கள் என்பதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தது தான் வேதனை அளிக்கிறது. அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாக பார்க்க வேண்டும்.

துணை முதலமைச்சர் விவகாரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி. விஜய் உடன் சீமான் இணைந்து செயல்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். என்னைப் பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது.. முக்கிய புள்ளிகள் சிக்குவது எப்போது? - armstrong murder case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.