ETV Bharat / state

இடித்து பல மாதங்களாகியும் கட்டாத வகுப்பறை.. போராட்டத்தில் குதித்த பெற்றோர்.. ஆம்பூர் அருகே பரபரப்பு!

ஆம்பூர் அடுத்த இராமசந்திராபுரம் பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மழைக் காலங்களில் சேறும் சகதியிலும் திறந்த வெளியில் அமர்ந்து மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதாகக் கூறி, பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள்
சாலை மறியல் போராட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட இராமசந்திராபுரம் பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த துவக்கப் பள்ளியில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக பள்ளி வளாகத்தில் இருந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடித்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரையில் புதிய கட்டிடம் கட்டித் தரவில்லை என்றும், அதனால் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் திறந்த வெளியில் அமர்ந்து கல்வி பயில்வதாகவும், மேலும் மழைக் காலங்களில் சேறும் சகதியிலும் மாணவர்கள் அமரும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

சாலை மறியல் போராட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

மேலும், தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வருவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறி மாணவர்களின் பெற்றோர், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் ஆத்திரமடைந்த பெற்றோர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பிரான்ஸ் நாட்டு அனுபவத்தை கவிதை மூலம் தெரிவித்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், மாணவர்களின் பெற்றோருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, இது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் மணிவாசகம் மற்றும் உதவி வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இதுகுறித்து மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளனிடம் கேட்டபோது, “ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் கீழ் 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு, கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.