தேனி: தமிழ்நாடு பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் கள்ளர் பள்ளிகளை இணைக்க வேண்டும் என முன்னாள் நீதிபதி சந்துருவின் தனிநபர் அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் நலப் பள்ளி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் ஜாதிப் பெயர்களை மாற்றி அரசு பள்ளிகளாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட சீரமைப்பு கருத்துக்கள் குறித்து சுமார் 660 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து பார்வர்ட் பிளாக் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு பிரமலைக்கள்ளர் சமுதாயக் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம், போடி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கள்ளர் பள்ளிகளில் மாணவர்களை வகுப்பு புறக்கணிப்பு செய்ய வைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் அமைப்பினர் மற்றும் தமிழ்நாடு பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பினர் கள்ளர் நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவியர்களுக்கு விடுமுறை என்று கூறி அவர்களை வெளியேற்றி பள்ளிகளை பூட்டி போராட்டம் நடத்தினர். பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே அங்குள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு விடுமுறை என்று கூறி, அவர்களைை வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளனர்.
இதனால் மாணவர்கள் பள்ளி விடுமுறை என நினைத்து வெளியேறிய பிறகு பள்ளிக்கு பூட்டு போடப்பட்டு, அங்கு வகுப்பு புறக்கணிப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, அரசு கள்ளர் பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்காக முன்னாள் நீதிபதி சந்துரு மூலம் ள்ளர் பள்ளிகளுக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்துவதற்காக நாடகமாடி வருகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களஅ முன்வைத்தனர்.
இதையும் படிங்க: உறவினர் கொலைக்கு பழிவாங்கிய கும்பல்.. கடைக்குள் புகுந்து கொலை முயற்சி.. தேனியில் பரபரப்பு! - Murder attempt in Theni