சென்னை: ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ் (55). மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஆவடி விமானப் படையில் டிஎஸ்சி (DSC) பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். மேலும், இவருக்கு ஜீவஸ்ரீ என்ற நபருடன் திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், காளிதாஸ் கடந்த 2 நாட்களாக 8ம் எண் கொண்ட விமானப்படை டவரில் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே நேற்று அதிகாலை 3.55 மணியளவில், பணியிலிருந்த காளிதாஸ் தற்கொலை செய்து கொண்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அப்போது சthதம் கேட்டு வந்த அதிகாரிகள் சென்று பார்த்தபோது, காளிதாஸ் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, காளிதாஸை மீட்ட விமானப் படையினர், இதுதொடர்பாக ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காளிதாஸ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் என்ன என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு: தற்கொலை எதற்கும் தீர்வல்ல; சொந்த காரணங்களாலோ அல்லது மனஅழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இந்திய விமானப் படையில் பணி வாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?