ETV Bharat / state

தொடர் விடுமுறை; சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு! - Air Fare is hike

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 12:35 PM IST

Chennai Airport flight ticket hike: சுதந்திர தினம் மற்றும் அடுத்தடுத்த விடுமுறை தினங்கள் வருவதால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் வழக்கமான கட்டணத்தை விட பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இண்டிகோ விமானம் கோப்புப்படம்
இண்டிகோ விமானம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சுதந்திர தினவிழா தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் புறப்பட்டு செல்வதால், சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருப்பதால் நாடு முழுவதும் முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. சுதந்திர தினம், அதனைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைகள் வருகிறது. இதை அடுத்து தொடர் விடுமுறையாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னை நகரில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கின்றது. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதன் காரணமாக வழக்கம் போல் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

சென்னை - தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,301 ஆனால் இன்றும், நாளையும் ரூ.10,796

சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063 ஆனால் இன்றும், நாளையும் ரூ.11,716

சென்னை - திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,382 ஆனால் இன்றும், நாளையும் ரூ.7,192

சென்னை - கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,369 ஆனால் இன்றும், நாளையும் ரூ.5,349

சென்னை - சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,715 ஆனால் இன்றும், நாளையும் ரூ.8,277

சுதந்திர தினவிழா தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் இதேபோல் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு விமானங்களில் பயணம் செய்கின்றனர். அதே நேரத்தில் வெளி மாநிலங்களான பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கான விமான கட்டணங்கள் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: சென்னையில் இருந்து புவனேஸ்வர், பக்டோரா, திருவனந்தபுரத்திற்கு புதிய விமான சேவை - Air India Express

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.