சென்னை : தமிழ்நாட்டில் ஆயுதபூஜை , விஜயதசமி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் புறப்பட்டு செல்வதால், சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
தொடர் விடுமுறையாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கின்றது. பயணிகளின் கூட்டம் அதிகரிப்பதன் காரணமாக வழக்கம் போல் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,200 இருந்தாலும், ஆனால் இன்று ரூ.12,026 - 18,626.
சென்னை - தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.5,006 இருந்தாலும், ஆனால் இன்று ரூ.11,736 - 13,626.
சென்னை - திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,382 இருந்தாலும், ஆனால் இன்று ரூ.5,456 - 6,907.
சென்னை - கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,290 இருந்தாலும், ஆனால் இன்று ரூ.10,611 - 10,996.
சென்னை - சேலம் வழக்கமான கட்டணம் ரூ. 3,317 இருந்தாலும், ஆனால் இன்று ரூ.10,792.
இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி 2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணை வெளியீடு
3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் இதேபோல் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு பயணம் செய்கின்றனர். அதிலும் இன்றைய தினம் காலையில் செல்லும் விமானங்களை விட மாலை மற்றும் இரவு நேரத்தில் செல்லும் விமானங்களின் டிக்கெட் அனைத்தும் நிரம்பி விட்டன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்