கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், "கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 39 இடங்களில் வெற்றி பெற்றார் கூட்டணி பற்றி கவலைப்படும் கட்சி அதிமுக இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் 39 இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி தலைமையில் மாற்றத்தை கொண்டு வருவோம்" என்று கூறினார்.
பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் கொறடா எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நான்கரை வருடம் தமிழகத்தில் சிறந்த முறையில் ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் உள்ள இயக்கங்களில், அதிமுக தமிழகத்தில் இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட பெரிய இயக்கமாகும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில், தகவல் தொழில்நுட்ப அணி(AIADMK IT Wing) மூலமாக ஒரு கோடி ஓட்டுகள் அதிகம் பெற முடியும். தமிழகத்தில் திமுக ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எனவே, தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுகவின் வெற்றிக்கு தகவல் தொழில் நுட்ப அணியின் பங்களிப்பு, மிக முக்கியமானதாக இருக்கும்" என்று நம்பிக்கை என்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் மகேஷ் குமார், மின்னல் சீனி மற்றும் நகர ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 2015; விருது பெற்றபின் ஜோதிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!