சென்னை: இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. திமுக தரப்பில் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி கனிமொழி தலைமையிலான குழு தேர்தல் அறிக்கையைத் தயார் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் பணிகள் கண்காணிப்புக் குழு, தொகுதி பங்கீட்டுக்குழு ஆகியவையும் அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அதிமுக தரப்பிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழு அமைக்கப்பட்டு ஜனவரி 22 ஆம் தேதி அறிவிக்கபட்டது. அதன்படி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தம்பிதுரை, செங்கோட்டையன், தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி ஆகியோர் அடங்கிய தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய தேர்தல் விளம்பரக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் காலமானார்!