ETV Bharat / state

"மு.க.ஸ்டாலின் நடிப்பை பார்த்தால் நடிகர் திலகமே மயங்கியிருப்பார்" - கோவையில் முதலமைச்சரை விளாசிய ஈபிஎஸ்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

AIADMK Edappadi K.Palaniswami: அதிமுக சாதிக்கும் மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி எனவும், கோவை அதிமுகவின் இரும்பு கோட்டை இதில் யாரும் நுழைய முடியாது எனவும், ஸ்டாலின் நடிப்பைப் பார்த்தால் நடிகர் திலகம் மட்டும் தற்போது உயிரோடு இருந்தால் மயங்கி விழுந்திடுவார் எனவும் எடப்பாடி கே.பழனிசாமி கோவையில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Etv BharatAIADMK Edappadi Palaniswami election campaign at Coimbatore
AIADMK Edappadi Palaniswami election campaign at Coimbatore
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 9:37 AM IST

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை கொடிசியா மைதானத்தில், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கோவை மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் எஸ்.பி.வேலுமணி கூட்டத்தைப் பார்க்கும் போது மாநாடு போன்று உள்ளது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஒட ஓட விரட்டுவோம். அதிமுக கூட்டணி தான் பலமான கூட்டணி என்பதை கடந்த 10 நாட்களாகக் காண்பித்து வருகிறோம். இதனால், மு.க.ஸ்டலினுக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது.

கோவை 'அதிமுகவின் இரும்பு கோட்டை இதில் யாரும் நுழைய முடியாது. அதிமுக 10-க்கு 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மாவட்டம், கோவை. இங்கு சரித்திர வெற்றி பெற வேண்டும். அதிமுக வெற்றி குறித்து பலரும் பலவகையாக பேசி வருகிறார்கள். ஸ்டாலின் கூட்டணி பலமாக இருக்கிறது, வெற்றி பெற்றுவிடலாம் என பகல் கனவு காண்கிறார். ஆனால், மக்கள் அதிமுக பக்கமே உள்ளனர். ஆகையால், அதிமுக தான் வெற்றி பெறும்.

முதலமைச்சரிடம் பதவிக்குத் தகுந்த பேச்சு இல்லை. நாகரிகம் தெரியாத மனிதர் ஸ்டாலின். ஆனால், நான் கிராமத்திலிருந்து வந்தவன். ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை, இல்லையென்றால் என்னுடைய தொண்டன் கூட பேசுவான். லட்சியம் உள்ள இயக்கம் அதிமுக; திமுகவைப் போன்று கொள்ளை அடிக்கும் கட்சி இல்லை. மக்களுக்காக உழைத்தவர் ஜெயலலிதா, அவருடைய உடல் நலத்தைக் கூட கண்டு கொள்ளாமல் மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இவர்களைப் போன்றவர்கள் உருவாக்கிய கட்சி தான் அதிமுக.

முதலமைச்சருக்குத் தெம்பு, திராணி உள்ளதா? அப்படி இருந்தால் கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்களைச் சொல்ல முடியுமா?. உங்கள் சாதனையை மேடை போட்டு பேசுங்கள், நானும் கடந்த 10 ஆண்டுகளில் செய்த திட்டங்களை பேசுகிறேன். ஆனால் எங்கள் மீது பொய் பரப்புரையை வைக்க வேண்டாம். அதிமுக பாஜகவைப் பார்த்து பயப்படுவதாக ஸ்டாலின் சொல்லுகிறார், இந்தியாவில் எந்த கட்சிக்கும் பயப்படாத கட்சி அதிமுக மட்டும்தான். மடியில் கணம் இல்லை, வழியில் பயமில்லை, யாருக்கும் அடிமையும் இல்லை. அதிமுக தொண்டன் கூட யாருக்கும் பயப்பட மாட்டான்.

ஆனால், இரட்டை வேடம் போடும் கட்சி திமுக. பிரதமரைக் கண்டு சரணாகதி அடைந்தவர்கள். பிரதமரை அழைத்து பல திட்டங்களைத் துவங்கி வைக்க என்ன காரணம்?. நீங்களா மோடியை எதிர்க்கிறீர்கள்?. காவேரி நதி நீர் பிரச்சனையில் நாடாளுமன்றத்தை 22 நாள் முடக்கி வைத்தோம், நாடே திரும்பி பார்த்தது. எதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் அதிமுகவினர். நாங்களே கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம். எதற்கு கள்ளக் கூட்டணி என்று பேசி வருகிறீர்கள்?.

உங்களுக்கு பயம் வந்துவிட்டது. நீங்கள் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்களா?. அதிமுகவை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?. கச்சத்தீவை மீட்கும் திறன் அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக எதுவும் செய்யவில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் பேசி வருகிறார்கள். கச்சத்தீவை மீட்க தொடர்ந்து பேசி வரும் கட்சி அதிமுக மட்டும்தான். மீனவர்கள் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை இருந்தால் வழக்கு போடுங்கள். நீதிமன்றம் மூலம் கச்சத்தீவை மீட்க முடியும்.

ஆனால், மீனவ மக்களின் வாக்குத் தேவை என்பதால் தற்போது பேசி வருகிறார்கள். மீனவ மக்களுக்கு எப்போதுமே அதிமுக ஆதரவளித்து வருகிறது. மூன்று நாளைக்கு 1 முறை அதிமுக தண்ணீர் கொடுத்தது. ஆனால் தற்போது 15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்து வருகிறார்கள். கடுமையான வறட்சி வரப் போகின்றது. தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.

திமுக பல்வேறு துறையில் ஊழல் செய்துள்ளனர். ரூ.656 கோடி தேர்தல் பத்திரம் மூலம் பணம் திமுகவுக்கு வந்துள்ளது. ஸ்டாலின் நடிப்பைப் பார்த்தால் நடிகர் திலகம் இப்போது உயிரோடு இருந்தால் மயங்கி விழுந்திருப்பார். ஆன்லைன் ரம்மி நிர்வாகத்திடம் தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்கிய கட்சி திமுக. 10 ரூபாய் பாலாஜி பாதுகாப்பாக சிறையில் இருக்கிறார். இல்லையென்றால் மாவட்டம் விளங்காமல் போயிருக்கும். ஸ்டாலின் பணத்தை கொடுத்து கொடுத்து நல்லவராக நடித்து கொண்டு இருந்தார்.

போதைப் பொருள் விற்பனை அமோகமாகவுள்ளது; போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப் பொருள் விவகாரத்தில் பெரிய அளவில் கைது இருக்கும் எனப் பேசி வருகிறார்கள். அது தேர்தலுக்கு முன்னா? பின்னா? எனத் தெரியவில்லை. பில்லூர் குடிநீர் திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி உதயநிதி திறந்து வைத்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளலூர் பேருந்து நிலையம் மீண்டும் கட்டித் தரப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கச்சத்தீவை மீட்பது குறித்து பாஜக கூறுவதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள் - அதிமுகவை ஆதரித்து நடிகை கவுதமி பேச்சு! - Actress Gowthami Criticised Bjp

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.