ETV Bharat / state

கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு.. தலையில் முக்காடு போட்டு வந்த அதிமுக கவுன்சிலர்கள்!

கோவை மாநகராட்சியில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தபட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் தலையில் முக்காடு போட்டபடி மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

சொத்து வரி உயர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் புகைப்படம்
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா, பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது "மாநகராட்சியில் சொத்துவரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலையில் முக்காடு போட்டபடி வந்துள்ளதாகவும், 6 சதவீத வரியினை திரும்ப பெற வேண்டும்" என அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். மேலும் திமுக ஆட்சியில் தினம், தினம் எதாவது ஒரு வரியை ஏற்றிக் கொண்டு இருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிகுள்ளாகி வருகின்றனர்" எனவும் குற்றம்சாட்டினர்.

மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனைதொடர்ந்து கோவை மாநகராட்சி கூட்டம் துவங்கிய நிலையில் சொத்து வரி உயர்வுக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநகராட்சி மேயர் ரங்கநாயகியுடன் வாக்குவாதத்தில் ஈடிபட்ட காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், அதிமுக கவுன்சிலர்களை மேயர் ரங்கநாயகி சமாதானப்படுத்தினார்.

அப்போது சொத்து வரி குறித்து அரசிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ரங்கநாயகி தெரிவித்த நிலையில் ,அவரது வாக்குறுதியை ஏற்க மறுத்து கவுன்சிலர்கள் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. வெல்லமண்டி நடராஜன் வருகை!

ஆத்துப்பால மின் மயானம்: இதே போல் கோவை மாநகராட்சியில் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தை ஈஷா யோகா மையம் பராமரித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஒப்பந்தந்தை நீடிக்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது ஈஷா யோகா மையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் மாயன பராமரிப்பு பணிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். இதனையடுத்து ஆத்துப்பால மின் மயான பராமரிப்பை ஈஷா மையத்திற்கு வழங்கும் தீர்மானத்தை நிறுத்தி வைப்பதாக கூறிய மேயர் ரங்கநாயகி, அடுத்த மாதம் இதுகுறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதங்களால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.