ETV Bharat / state

வேளாண் பட்ஜெட்டில் புது வரவு.. முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

TN Agri Budget 2024 : தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TN Agri Budget 2024
வேளாண் பட்ஜெட்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 11:14 AM IST

Updated : Feb 20, 2024, 2:43 PM IST

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் மற்றும்உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். இதில், மண்வளத்தை பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" என்ற புதிய திட்டம் 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்து உள்ளார்.

  • 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டிலுள்ள 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
  • மண்புழு உரம் தயாரித்து மண்வளத்தை மேம்படுத்திட, ஒரு விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வீதம் 10,000 விவசாயிகளுக்கு வழங்கிட 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள் அமைத்து, தொடர்ந்து மண்புழு உரம் தயாரிக்க ஏதுவாக, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து மண்ணின் வளம் காக்க, 6 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்படுத்த 7 கோடியே 50 லட்சமும், 37,500 ஏக்கர் அமில நிலங்களைச் சீர்படுத்த ரூ.15 கோடியும் மொத்தமாக ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2 லட்சம் விவசாயிகளுக்கு 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 லட்சம் ஏக்கரில் இடுவதற்காக, 5 லட்சம் லிட்டர் உயிர் உரங்கள் வழங்கப்படும்.
  • வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைத்தல்
  • வேம்பினைப் பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண்காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
  • நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
  • உயிர்ம வேளாணமை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு
  • 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு
  • உயிர்ம வேளாண்மைக்கு இன்றியமையாத பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மண்புழு உரம், அமிர்தக்கரைசல், மீன்அமிலம் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள 100 குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைத்து ஊக்குவிக்க, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 'வேளாண் காடுகள் திட்டம்' மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு

  • சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு
  • மக்கள் பழச்செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்டம் அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் தேனீ முனையம் அமைக்க 3 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு
  • நுண்ணுயிர் கலவையை ஆய்வு செய்ய ரூ.1 கோடியே 39 லட்சம் நிதி ஒதுக்கீடு
  • 100 உழவர் அங்காடிகள் ரூ.5 கோடி மதிப்பில் மாநில நிதியில் செயல்படுத்தப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'தமிழ் புதல்வன் திட்டம்' இனி மாணவர்களுக்கு மாதம் 1000 - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு..!

Last Updated : Feb 20, 2024, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.