சென்னை: திரவ நைட்ரஜன் உள்ளடக்கிய ஸ்மோக் பிஸ்கட்டுகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஸ்மோக் பிஸ்கட் கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள், மால்கள், திருமணம் போன்ற நிகழ்வுகள் மற்றும் கோயில் விழாக்களின் போது போது ஸ்மோக் பிஸ்கட் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடப்பதாகவும் உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் ஈடிவி பாரத்துக்கு தெரிவித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ஸ்மோக் பிஸ்கட்டுகளில் புகை வருவதற்கு காரணமான திரவ நைட்ரஜன் மைனஸ் 196 டிகிரியில் இருக்கக் கூடிய ஒரு பொருள். இதனை உணவுப் பொருட்களை பதப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அதனை உட்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.