ETV Bharat / state

அதிமுக கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய திட்டம்? - வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பரபரப்பு.. சாலை மறியலால் சலசலப்பு! - VaitheeswaranKoil municipality

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 12:26 PM IST

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அதிமுக வார்டு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய பேரூராட்சி தலைவர் முயல்வதாக கூறி, அதிமுகவினர் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக -திமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம்
அதிமுக -திமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் (திமுக) தலைமையில் நடைபெற இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் அன்புச் செழியன், செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

அதிமுக உறுப்பினர் மீது நடவடிக்கை: அதிமுக பேரூராட்சி மன்ற 9வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் ராஜ கார்த்திகேயன். இவர் பேரூராட்சி சார்பாக நடைபெற்ற 3 கூட்டத்திற்கு வருகை புரியவில்லை என தெரிகிறது. இதனால் அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தலைவர் பூங்கொடி கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து கார்த்திகேயன் விளக்க கடிதம் அளித்துள்ளார். இருப்பினும் அவர் கொடுத்த கடிதம் ஏற்புடையதாக இல்லை என பூங்கொடி அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரை தகுதி நீக்கம் செய்ய ஒருமனதாக முடிவு செய்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாமக மன்ற உறுப்பினர்கள் ராஜா கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து கூட்டம் முடிந்து வெளியேறினர்.

வழிமறித்து வாக்குவாதம்: இதனை தொடர்ந்து அதிமுக மன்ற உறுப்பினர் ராஜ கார்த்திகேயனுக்கு ஆதரவாக அதிமுக, பாமக மன்ற உறுப்பினர்கள் தலைவர் துணைத் தலைவரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அதிமுக பேரூர் கழக செயலாளர் போகர் ரவி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜ கார்த்திகேயனிடம் 30-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விளக்க கடிதம் கொடுக்குமாறு கேட்டுவிட்டு 26-ஆம் தேதியே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பேரூராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு வெளியே சென்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரை வழிமறித்து நடவடிக்கை எடுத்ததற்கான காரணங்களை கூறிவிட்டு செல்லுங்கள் கூச்சலிட்டனர். அப்போது நகர் மன்ற தலைவரின் கணவர் அலெக்சாண்டருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர். இதனால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து அதிமுகவினர், மீண்டும் அலுவலகத்தில் செயல் அலுவலர் அசோகனிடம் நேரில் சென்று தங்கள் தரப்பு நியாயத்தை தெரிவித்துக் கலைந்துச் சென்றனர். இது குறித்து அதிமுகவினர் கூறுகையில் மாவட்டச் செயலாளர்கள் ஒப்புதலோடு அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பால் குடிப்பதால் 8 வயதிலே பூப்படையும் பெண்கள்? மரபணு மாற்றத்தால் இப்படிப்பட்ட விளைவுகளா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.