ETV Bharat / state

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கீழ் உள்ள கல்லூரிகளில் இலவசக் கல்வித் திட்டம்.. விண்ணப்பம் எப்போது? - college admission - COLLEGE ADMISSION

Madras University Free Education scheme: சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுயநிதி மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் இலவசமாக இளநிலைப் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

admission-open-under-free-education-scheme-in-self-financed-and-government-aided-colleges
சென்னைப் பல்கலைக்கழகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 4:10 PM IST

சென்னை: இது தொடர்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் 2010-11ஆம் கல்வி ஆண்டு முதல் 'சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டம்' ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன்படி 2024-25ம் கல்வி ஆண்டிலும் இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2023-2024 கல்வி ஆண்டில் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொருளாதாரத்தின் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்பிற்கு வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருட வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்கு (ரூ.3,00,000) மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் விவரம் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களின் விவரம் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) உள்ளது. இலவசக் கல்வித் திட்ட விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்கும் பதிவேற்றம் செய்யவேண்டும். இணையத்தளத்தில், எல்லா சான்றிதழ்களின் (சொபிட் copies of certificates) பதிவேற்றம் செய்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வெளியானது இறுதி வாக்குப்பதிவு நிலவரம்.. தமிழ்நாட்டில் 69.72 சதவீத வாக்குகள் பதிவு! - Final Vote Turnout In TN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.