ETV Bharat / state

"ஒரு இந்துவுக்கே இந்து கோயிலில் அனுமதி இல்லை" - நடிகை நமீதா வருத்தம்! - Actress Namitha

Actress Namitha: இந்து கோயிலில் தரிசனம் செய்ய இந்துவாகிய என்னிடம் இந்து தான் என சான்றிதழ் கேட்பது வருத்தமளிக்கிறது எனவும், வேறு எந்த கோயிலிலும் எனக்கு இதுபோன்று நடந்தது இல்லை எனவும் நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

நடிகை நமீதா மற்றும் அவரது கணவர்
நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 10:04 AM IST

Updated : Aug 27, 2024, 10:46 AM IST

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பாலை அருகே உள்ள இஸ்கான் கோயிலில் நடைபெற்ற ஜென்மாஷ்டமி நிகழ்வில் கலந்து கொள்ள தனது கணவருடன் மதுரை வந்திருந்த நடிகை நமீதா, நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யச் சென்றுள்ளார். ஆனால், அங்கு நமீதாவிடம் இந்து என்பதற்கு ஆதாரமாக சான்றிதழ் கேட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த நமீதா, "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய சென்றபோது, நானும் எனது கணவரும் இந்து தான் என்பதற்கு சான்றிதழ் கேட்டார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களுக்குஅ சென்றுள்ளேன். ஆனால், எந்த கோயில்களிலும் இதுபோன்று கேள்வியை யாரும் எழுப்பியது இல்லை. திருப்பதியில் கூட நம்மிடம் உள்ள முகவரிச் சான்றுக்கான ஆதாரங்களை மட்டுமே கேட்பார்களே தவிர, இதுபோன்று கேட்டதில்லை.

திருப்பாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு வந்திருக்கிறோம் என்று தெரிந்தும் கூட, இதுபோன்று நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. பாஜக கட்சி என்று அடையாளத்தோடு இங்கு நாங்கள் வரவில்லை. அப்படி வருவதாக இருந்திருந்தால், அதற்குரிய நபர்களோடு தொடர்பு கொண்டு நாங்கள் கோயிலுக்கு வந்திருப்போம். ஆகையால் பாஜகவுக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தனிப்பட்ட எங்களுடைய பயணம். விஐபி என்ற அடிப்படையில் எங்களை அனுமதிக்கவில்லை என்றாலும் கூட, பொதுமக்களில் ஒருவராகக் கூட அனுமதித்திருக்க வேண்டும்.

அவர்கள் கேட்டதில் கூட நான் குறை சொல்லவில்லை, ஆனால் கேட்ட விதம் தான் மிகவும் தவறு. தேவையான ஆதாரங்களை இவர்கள் கேட்டிருந்தார்கள் என்றால், அதில் ஒன்றும் தவறில்லை. யாருக்கும் எந்தவித தொந்தரவும் தரக்கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிந்தே சென்றோம். ஆனால், நாங்கள் தான் வந்திருக்கிறோம் என்பதை உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திவிட்டு தான் கோயிலுக்குள் செல்ல முயன்றோம்.

அரசியல் ரீதியாக நாங்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக வேறு யாருக்கும் நடைபெறக்கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள். ஏனென்றால், வெளிநாட்டில் இருந்து வருகின்ற நபர்களுக்கு இது போல நேர்ந்தால் நம்மைப் பற்றி அவர்கள் தவறாக நினைப்பார்கள். எங்களை குறுக்கு விசாரணை செய்த அந்த இடத்தில் சரியான நபர்களை பதவியில் அமர்த்துங்கள் என்பது மட்டுமே எங்களது வேண்டுகோள்.

இதுவரை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 5 முறை வந்து சென்றுள்ளேன். ஆனால், யாருக்கும் தெரியப்படுத்தியது இல்லை. நம்மால் யாருக்கும் தொந்தரவு நேரக்கூடாது என்ற அடிப்படையில் தான் நான் கோயிலுக்கு வந்து செல்கிறேன். இந்த முறை இவ்வாறு நேர்ந்தது வேதனையாக உள்ளது. இந்த பிரச்னைக்குப் பிறகு எங்களை பாதுகாப்போடு கோயிலுக்குள் அனுமதித்து, போலீசார் பாதுகாப்பாக திரும்ப அழைத்து வந்தனர். அந்த போலீசாருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரபல நடிகை..காரணம் என்ன?

Last Updated : Aug 27, 2024, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.