ETV Bharat / state

மோசடி வழக்கில் பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது!

Actress Jayalakshmi: சினேகம் அறக்கட்டளை மோசடி வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி கைது செய்யபட்டுள்ளார்.

actress jayalakshmi arrested
நடிகை ஜெயலட்சுமி கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 5:14 PM IST

நடிகை ஜெயலட்சுமி கைது

சென்னை: சினேகம் பவுண்டேஷன் யாருக்குச் சொந்தமானது? என பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் ஆகியோர், கடந்த 2022ஆம் ஆண்டு மாறி மாறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துக் கொண்டனர்.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், ஜெயலட்சுமி மற்றும் சினேகன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில், சினேகம் பவுண்டேஷன் பெயரில் நடிகை ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டதாக, பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்து இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, மீண்டும் பாடலாசிரியர் சினேகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது குறித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இது குறித்து விசாரணை செய்த நீதிபதிகள், பாடலாசிரியர் சினேகன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு பாடலாசிரியர் சினேகன் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து, சினேகம் அறக்கட்டளை பண மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாடலாசிரியர் சினேகனும் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விசாரணை செய்த நீதிபதிகள் ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில் நடிகை ஜெயலட்சுமி மீது, மோசடி உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இரு தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சினேகம் அறக்கட்டளை வழக்கு தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி வீட்டில், திருமங்கலம் போலீசார் சோதனைகள் மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இதில் அறக்கட்டளை தொடர்பாக ஆவணங்களை சில போலீசார் கைப்பற்றியுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயலட்சுமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் பாடலாசிரியர் சினேகன் கடந்த 2015 ஆம் ஆண்டு சினேகம் பவுண்டேஷன் என்று அறக்கட்டளை தொடங்கி இருப்பதும் அதே பெயரில் நடிகை ஜெயலட்சுமி கடந்த 2018 ஆம் அறக்கட்டளை தொடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலியான ஆவணங்களை பயன்படுத்தி பண வசூல் செய்ததற்கான ஆவணங்களைப் பறிமுதல் செய்த போலீசார், நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சொத்து பிரச்சனையில் தாய் மாமன் சுத்தியலால் அடித்து கொலை; கன்னியாகுமரியில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.