ETV Bharat / state

படிக்கும்போதே மறைமுக அரசியலில் ஈடுபடுங்கள்: த.வெ.க. தலைவர் விஜய் கருத்து - Vijay education award event - VIJAY EDUCATION AWARD EVENT

Vijay education award event: எதிர்காலத்தில் அரசியலும் கரியரில் ஒரு தேர்வாக இருக்க வேண்டும் எனவும், நன்கு படித்தவர்கள் நல்ல தலைவர்களாக வர வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 11:46 AM IST

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘கல்வி விருது விழா’ நிகழ்வில் பேசும்போது, “நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த என்னுடைய தம்பி தங்கைகளுக்கும், பெருமையுடன் வந்துள்ள பெற்றோர்களுக்கும், விழாவை ஏற்பாடு செய்த ஆனந்திற்கும், தவெக தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பானவர்களுக்கும், எனது பணிவான வணக்கங்கள்.

மீண்டும் ஒருமுறை எதிர்கால தமிழ்நாட்டின் மாணவ மாணவிகளை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு சிலரை சந்தித்தால் அவர்களது பாசிட்டிவ் கெமிஸ்ட்ரி நமக்கும் வொர்க் அவுட் ஆகும் என்பார்கள், அந்த வகையில் உங்களை சந்தித்ததில் ஒரு பாசிட்டிவ் கெமிஸ்ட்ரி பயங்கரமாக வொர்க் அவுட் ஆகிறது.

உங்களுக்கு கரியரில் முடிவு எடுப்பதில் தொய்வு குழப்பம் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் பெற்றொர்கள் அல்லது உங்களது ஆசிரியர்களுடன் ஆலோசனை செய்யுங்கள். எல்லா துறையும் நல்ல துறைதான் நீங்கள் எடுக்கும் துறையில் 100 சதவீதம் உழைப்பு போட்டால் நல்லது தான்.

உங்களுக்கு பிடித்த துறையில் தேர்ந்தெடுங்கள். பொதுவாக நாம் ஒரு துறையை தேர்வு செய்யும் போது அதில் எந்த அளவு தேவை உள்ளது என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் நன்றாக செயல்பட்டால் தலைமை இடத்திற்கு வர முடியும்.

இங்கு என்ன அதிகம் தேவை என்றால் நல்ல தலைவர்கள், நான் இதனை அரசியல் ரீதியாக சொல்லவில்லை. ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும், எதிர்காலத்தில் அரசியலும் கரியரில் ஒரு தேர்வாக இருக்க வேண்டும். நன்கு படித்தவர்கள் நல்ல தலைவர்களாக வர வேண்டும். படிக்கும் போது மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும். செய்தித்தாள்கள் நிறைய படிக்க வேண்டும். அவ்வாறு செய்திகளை அதிகம் படித்தால், செய்தி வேறு, கருத்து வேறு என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்.

சமூக வலைதளங்களில் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் பார்க்க வேண்டும். பெற்றோருக்கு அடுத்தபடியாக நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடும் சூழல் ஏற்படும், அதனால் நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள். தவறான நண்பர்களை நல்வழிப்படுத்த பாருங்கள். மேலும் நீங்கள் தவறான பழக்கத்தில் ஈடுபட்டு, உங்களது அடையாளத்தை இழந்து விடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் கல்வி விருது வழங்கும் விழா; அரசியல் கட்சித் தலைவராக விஜயின் முதல் மேடை! - TVK VIJAY EDUCATION AWARD 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.