சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியைப் பதிவு செய்தார்.
இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
#WATCH | Tamil Nadu: Actor and Tamilaga Vettri Kazhagam (TVK) chief Vijay unveils the party's flag at the party office in Chennai.
— ANI (@ANI) August 22, 2024
(Source: ANI/TVK) pic.twitter.com/YaBOYnBG6j
இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் அறிமுக விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜயின் தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர்.
காலை 9.10 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜய் சாதி, மதம் கடந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை உறுமொழி எடுக்க வைத்து தானும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
பின்னர், கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். அதில் மஞ்சள், சிவப்பு நிறத்துடன் போர் யானைகள் மற்றும் நடுவில் வெற்றிக்கான அடையாளமாக விளங்கும் வாகை மலர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து கட்சித் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதையும் படிங்க: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு எப்போது? - கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய பின் விஜய் கூறிய தகவல்