ETV Bharat / state

பார்க்கிங் பட பாணியில் நடிகர் பிர்லா போஸ்-க்கு வந்த பிரச்னை.. மகனை தாக்கியதாக புகார்! - பிர்லா போஸ்

Actor Birla Bose: பார்க்கிங் பட பாணியில் ஏற்பட்ட பிரச்னையில் நடிகர் பிர்லாவின் மகனை தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை
சென்னை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 3:48 PM IST

Updated : Mar 5, 2024, 4:05 PM IST

சென்னை: துணிவு, குருவி, யூ டர்ன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், கோலங்கள், கல்யாண பரிசு போன்ற பல சீரியல்களிலும் துணை நடிகராக நடித்து பிரபலம் பெற்றவர், அப்சல் பாஷா என்கிற பிர்லா போஸ். இவர் மதுரவாயல் ஓம் சக்தி நகரில் உள்ள ராகவேந்திரா அப்பார்ட்மெண்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது, அவரது 15 வயது மகன் தாக்கப்பட்டு உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளார். இதனைக் கண்ட பிர்லா, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

பின்னர், அவரது மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல், தான் டியூஷன் முடித்துவிட்டு திரும்பியபோது, வழிமறித்து தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நடிகர் பிர்லா சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, வீட்டின் கீழ் தளத்தில் உள்ள சிறுவன் தனது மகனைத் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, மதுரவாயல் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் மேல் தளத்தில் உள்ள சிறுவனை பார்ப்பதற்காக சில நண்பர்கள் வந்ததாகவும், அவர்கள் பார்க்கிங்கில் இருந்த தனது காரை சேதப்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது தனது மகன் அவர்களிடம் தட்டிக் கேட்டதால் மோதல் நிலவி வந்ததாக தெரிவித்துள்ளார்.

தான் படப்பிடிப்பில் மும்மரமாக இருந்து வந்த நிலையில், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது மகனை அந்த வீட்டுச் சிறுவன் 10 பேருடன் சேர்ந்து உள் காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்கி விட்டதாக சிசிடிவி கேமரா ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். நடிகர் பிர்லா அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்களுடன் மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக்கின் சகோதரர் விசிகவில் இருந்து நீக்கம்.. கட்சித் தலைமை கூறிய காரணம் என்ன?

Last Updated : Mar 5, 2024, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.