ETV Bharat / state

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கொலை குற்றவாளி மரணம்.. திருவள்ளூரில் பரபரப்பு! - death during police investigation

Murder case accused mysterious death: கொலை வழக்கில் கைதாகி, கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்த கவுன்சிலர் சாந்தகுமாரை, இன்று போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை முன் போலீசார் குவிப்பு
போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கொலை குற்றவாளி மர்மமான முறையில் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 11:01 PM IST

திருவள்ளூர்: வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.பி.ஜி.டி.சங்கர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்துவிட்டு, கடந்த வாரம் வெளியே வந்த குற்றவாளி சாந்தகுமாரை, இன்று (ஏப்.13) காலை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பிரபல ரவுடியுமான பி.பி.சி.டி.சங்கர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பூந்தமல்லி அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு 15 ஆவது வார்டு கவுன்சிலர் சாந்தகுமார் என்கிற சாமு, உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து கடந்த வாரம் சனிக்கிழமை சாந்தகுமார் உள்ளிட்ட குற்றவாளிகள் 7 பேரும், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் இன்று (ஏப்.13) திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியில் உள்ள அவரது வழக்கறிஞர்களை சந்திக்க வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீசார் அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கச்சிப்பட்டு சாந்தகுமார், உடல் நலக்குறைவு காரணமக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிழந்துள்ளார். சாந்தகுமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாகவும் செவ்வாய்பேட்டை போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் சாந்தகுமாரின் மனைவி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட, தனது கணவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவருக்கு உடலில் எந்தவித வியாதியும் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் சாந்தகுமார் உயிரிழந்ததாக போலீசார் கூறுவது நம்பும்படி இல்லை எனவும், தனது கணவரின் இறப்பிற்கு காவல் துறையினரே காரணம் என்றும், இதற்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொலை வழக்கில் சிறையில் இருந்த கைதி ஒருவர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை நிலவும் நிலையில், அப்பகுதியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தென்காசியில் பட்டா மாறுதலுக்கு ரூ.13 ஆயிரம் லட்சம் வாங்கிய விஏஓ அதிரடி கைது! - Tenkasi Vao Arrest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.