ETV Bharat / state

5 பேர் ஏ.சி.சண்முகம் பெயரில் வேட்புமனு தாக்கல்! - AC SHANMUGAM - AC SHANMUGAM

AC Shanmugam: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில், தன் பெயரில் ஐந்து பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர் என புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

AC SHANMUGAM
AC SHANMUGAM
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 6:32 PM IST

AC SHANMUGAM

வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை மத்திய அரசு 6 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயை வரியாக பெற்றுள்ளது.

ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஆறு லட்சத்து 90 ஆயிரம் கோடியாக நிதியினை வழங்கி உள்ளது. சுமார் 73 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு அதிகமாக வழங்கியுள்ளது. தமிழ்நாட்டிற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு, மாநில அரசின் திட்டங்களைப் போல செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிகளை ஆதரித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். வேலூரிலும் பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்” என்றார். ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ஐந்து பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஓபிஎஸ்-க்கு மட்டும் அல்ல, என் பெயரிலும் ஐந்து பேர் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்று விடுவோனோ என்ற பயத்தில் தான் இதுபோல செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி நாட்டில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் மூலம் மக்கள் பாஜகவுக்கு அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவார்” என தெரிவித்தார்.

மேலும், தங்களுடைய கூட்டணி கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய அழைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்தவர், “ நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ரசிகர்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். தேர்தல் களத்திற்கு ரஜினிகாந்த் வரமாட்டார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "வேறு சின்னத்தில் போட்டி".. துரை வைகோ! - Durai Vaiko

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.