ETV Bharat / state

இலங்கையில் இருந்து சென்னை வந்த 24 ராமேஸ்வரம் மீனவர்கள்! - fishermen arrived chennai airport

Rameswaram Fishermen Arrived At Chennai Airport: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் சென்னை விமான நிலையம் வந்தனர்.

Rameswaram Fishermen Arrived At Chennai Airport
இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 24 ராமேஸ்வரம் மீனவர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 10:49 PM IST

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள், கடந்த மார்ச் 24ஆம் தேதி, இரண்டு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பலில் வந்து, ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் மடக்கிப் பிடித்தனர்.

மேலும், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, 24 மீனவர்களையும் கைது செய்தனர். அது மட்டுமல்லாமல், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள், விசைப்படகுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்பு, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, அவசரக் கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், கடந்த ஏப்.4ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் இந்திய மீனவர்கள் 24 பேரையும் விடுதலை செய்து இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து தூதரக அதிகாரிகள், மீனவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மீனவர்களுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாததால், இந்தியத் தூதரகம் 24 மீனவர்களுக்கும், அவசர காலச் சான்றிதழ் வழங்கியது. மேலும், மீனவர்களை விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கான விமான டிக்கெட்களுக்கான ஏற்பாடுகளையும் செய்தது.

இந்நிலையில், நேற்றிரவு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்குப் புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 24 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரையும், தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில், மீனவர்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: நீலகிரி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராவில் திடீர் கோளாறு.. காரணம் என்ன? - Nilgiris STRONG ROOM CAMERA PROBLEM

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.