ETV Bharat / state

ஆவின் நெய் தள்ளுபடி விற்பனை மார்ச் 31 வரை நீட்டிப்பு!

Aavin Ghee Discount Sale: ஆவின் நெய் தள்ளுபடி விற்பனை மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Aavin Ghee Discount Sale
Aavin Ghee Discount Sale
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 6:30 PM IST

சென்னை: இது தொடர்பாக ஆவின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு.வினீத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், பொதுமக்கள் தேவையை அறிந்து பல்வேறு வகையான பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், தயிர் மற்றும் பன்னீர் வகைகளை 10,000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

ஆவின் நிறுவனம் காலத்திற்கேற்ப மற்றும் பொதுமக்களின் விருப்பத்தை அறிந்து பால் உபபொருட்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. மேலும், பொதுமக்களின் தேவையை அறிந்து புதுவகையான பால் உபபொருட்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய்யினை, கடந்த மூன்று மாதங்களாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த தள்ளுபடியானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்த தள்ளுபடியினை மார்ச் இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் ஆவின் நெய்யினை தள்ளுபடி விலையில் மார்ச் 31 வரை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பன்னீர் கடந்த மூன்று மாதங்களாக சலுகை விலையில், 200 கிராம் பன்னீர் ரூ.120-லிருந்து ரூ.10 குறைத்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தள்ளுபடியினைத் தொடர்ந்து நீட்டிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதை காட்ட முடியுமா? - ஆளுநருக்கு சவால் விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.