ETV Bharat / state

கெத்து காட்ட கல்லூரி மாணவிகள் முன்பு பைக் வீலிங்.. நெல்லையில் வைரலாகும் வீடியோவால் மக்கள் அதிருப்தி! - BIKE WHEELING

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தின் அருகே பைக்கில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பைக்கில் வீலிங்
பைக்கில் வீலிங் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 9:15 PM IST

திருநெல்வேலி : சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் பைக்கில் சாகம் செய்வது, வண்ண வெடிகளை வீலிங் செய்த படி வெடிக்கச் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி உள்ளது. வீலிங் சாகசங்களைத் தடுக்கும் விதமாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், சில இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தின் அருகிலும், ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி வாசலிலும் பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இளைஞர்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து அதனை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து, லைக்குகள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் -ஆக பதிவிடுகின்றனர்.

இதையும் படிங்க : நெல்லை தனியார் நீட் பயிற்சி மையம்: மாணவிகள் விடுதி அனுமதியின்றி செயல்பட்டது அம்பலம்!

தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.