தென்காசி: தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்றில், முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டு, முதலாம் ஆண்டு மாணவிகளை மரக்கன்றுகள் நடச்செய்து உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும், கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவிகள் பல்வேறு விதமான திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில், இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் பேப்பர், சார்ட், பட்ஸ், ஐஸ் குச்சி மற்றும் பாசி போன்ற பொருட்களைக் கொண்டு பல்வேறு விதமான அழகுசாதன பொருள்களை செய்து அசத்தியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, சார்ட் பேப்பர் மூலம் ராக்கெட், ஐஸ் குச்சிகளைக் கொண்டு செய்யப்பட்ட கூடை மற்றும் பேப்பரைக் கொண்டு பல்வேறு விதமான விட்டு அலங்கார பொருட்களை செய்திருந்தனர். இந்த அனைத்து விதமான பொருட்களையும் பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் நேரில் வந்து பார்த்து மாணவிகளுக்கு பரிசும் வழங்கினர்.
மேலும் இக்கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவிகளை திறமையானவர்களாக மற்ற படிக்கும் பொழுதே மாணவிகளையே பாடம் எடுக்கச் சொல்லி, தயக்கத்தை போக்கி தன்னம்பிக்கையை உக்கப்படுத்துகின்றனர்.
இது குறித்து இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ப்ரசிகலா கூறுகையில், "இங்கு ஆசிரியர்கள் எங்களுக்கு கற்றுத் தரும்பொழுது, நீங்கள் என்ன படித்தீர்கள்? நான் கற்றுக் கொடுத்தது உங்களுக்கு புரிகிறதா? என்பதை கேட்பது மட்டும் இல்லாமல், எங்களையும் எழுந்து பாடம் நடத்த கூறி அந்த இடத்தில் ஒரு ஆசிரியராக அழகு பார்ப்பார்கள். அது எங்களுக்கு மிகவும் வழிகாட்டுதலாகவும், வாழ்வில் முன்னேறி செல்வதற்கு ஒரு அடித்தளமாகவும் உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடுகள் கண்டெடுப்பு!
முதலாம் ஆண்டு மாணவி ஜான்சி கூறுகையில், "இந்த கல்லூரியில் சேர்ந்தவுடன் எந்த விதமான பயத்தையும், தயக்கத்தையும் போக்குவதற்கு எங்களுக்கு கற்றுத் தருவது பெரும் உதவியாக உள்ளது. மேலும், இங்கு விளையாட்டு துறைக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிப்பதால் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதுமட்டும் அல்லாது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சி நடப்பது மூலமாக நாங்கள் பல்வேறு விதமான விசயங்களை கற்றுக் கொள்கிறோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கல்லூரியின் முதல்வர் தங்கம் கூறும்போது, "சுமார் 17 ஆண்டுகளாக இக்கல்லூரியினை நடத்தி வருகிறோம். இங்கு படித்த 1500க்கும் மேற்பட்ட மாணவிகள், தற்போது பல்வேறு துறைகளில் உயர்ந்த பதவிகளில் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த வருடம் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு கல்வியோடு சேர்த்து பல்வேறு விதமான கலைகளையும் கற்றுக்கொடுத்து அவர்களை உக்கப்படுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்