ETV Bharat / state

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தாயான 32 வயது பெண்..மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 32 வயது பெண்ணுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையின் மூலமாக குழந்தைப்பேறடைய வைத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

author img

By ETV Bharat Health Team

Published : 3 hours ago

குழந்தை பெற்றெடுத்த சித்ராவுடன் அவரது தாய்
குழந்தை பெற்றெடுத்த சித்ராவுடன் அவரது தாய் (Credit - ETVBharat TamilNadu)

மதுரை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 32 வயது பெண்ணுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையின் மூலமாக குழந்தைப்பேறடைய வைத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக இந்த மருத்துவ சிகிச்சைகளை சித்ரா மேற்கொண்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ராஜ் என்பவரின் மனைவி சித்ரா (32). இவர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நாள்பட்ட சிறுநீரக நோயினால் (Chronic kidney disease) பாதிக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிறுநீரகத் துறை மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். Haemodialysis என்ற சிகிச்சை அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது என்கிறார் ராஜாஜி மருத்துவமனை மகப்பேறியில் துறை தலைவர் மகாலட்சுமி.

அரசு ராஜாஜி மருத்துவக்குழு பேட்டி (Credit - ETVBharat TamilNadu)

மேலும், அவர் கூறுகையில், 'மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரைப்படி சித்ராவின் தாயாரின் சிறுநீரகம் பெறப்பட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, (Urology, Nephrology, Vascular surgery & Anaesthesiology) வெற்றிகராமாக மேற்கொள்ளப்பட்டன. மாற்று அறுவை சிசிச்சைக்குப் பின்னர் உரிய நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டு தொடர் கண்காணிப்பில் இருந்தார்.

பின்னர் அவர் கர்ப்பகால முன் கவனிப்பு ஆலோசனை பெற்று (Pre - conception counselling) 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கருவுற்றார். அவரது கர்ப்ப காலத்தில் எங்களது வல்லுநர் குழு, அவருக்குத் தேவையான ஆலோசனைகள், பரிசோதனைகள், சிகிச்சைகளை மேற்கொண்டு, தாயும் சேயும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி சித்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் உள்நோயாளியாக பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் சேய் நலன் கருதி அறுவை சிகிச்சை - மூலமாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தாய், மற்றும் பச்சிளம் குழந்தை இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி தகுந்த பேறுகால பின் சிகிச்சை ஆலோசனை வழங்கப்பட்டு, பின்னர் தாயும் சேயும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்' என்றார்.

அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ குழு
அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ குழு (Credit - ETVBharat TamilNadu)

ஆய்வுகள் சொல்வது என்ன?: அதனை தொடர்ந்து பேராசிரியர் தங்கமணி கூறுகையில், 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்ற பெண்களின் கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேறு பற்றிய தரவு அறிக்கைகளில், கருவுறுதல் மேலும் கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை எதிர்கொண்டு குழந்தைப்பேறு வெற்றிகராமாக அமைவது மிகவும் அரிது.

2020ஆம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் 204 பெண்கள் (Reproductive age) இனப்பெருக்க வயதில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதில் 9 பெண்கள் மட்டுமே வெற்றிகரமாக குழந்தை பேறுடன் நலமாக இருக்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

இது குறித்து சித்ரா கூறுகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு ஆலோசனைகள் மருத்துவ சிகிச்சைகள் வழங்கி எனக்கு உறுதுணையாக இருந்தனர். தற்போது நானும் குழந்தையும் நலமாக உள்ளோம். எனக்கு சிறுநீரகம் தானம் அளித்த எனது தாயாரும் நலமுடன் உள்ளார் என்றார். இந்த பேட்டியின் போது அனைத்து துறை சார்ந்த மருத்துவப் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.