ETV Bharat / state

காதலி கண்முன்னே காதலன் கொடூர கொலை.. நெல்லையில் பகீர் சம்பவம்! - TIRUNELVELI YOUTH MURDER - TIRUNELVELI YOUTH MURDER

Tirunelveli youth murder: திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவருந்தச் சென்ற நபரை சரமாரியாக வெட்டி சாய்த்து தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் புகைப்படம்
கொலை செய்யப்பட்டவர் புகைப்படம் (credits -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 5:17 PM IST

கொலை செய்யப்பட்டவரின் காதலி கதறி அழும் காட்சிகள் (credits -ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அடுத்த வாகை குளத்தைச் சேர்ந்தவர் தீபக் ராஜா(30). இவர் இன்று(மே 20) தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் உணவருந்தச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை அரிவாளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா உயிரிழந்தார். தனது கண்முன்னே காதலனை வெட்டி கொலை செய்ததைக் கண்டு தீபக் ராஜாவின் காதலி கதறி அழுதார்.

இது குறித்த தகவல் உடனடியாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் தீபக் ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்பட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் வட்டத்தில் கூறுகின்றனர்.

மேலும், தீபக் ராஜா தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. எனவே, சாதிய மோதல் காரணமாகவே தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை சம்பவம் நடைபெற்ற ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சாலையில், பட்டப்பகலில் காதலி கண் முன்னே காதலன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர்! - நீதிபதி பிறப்பித்த உத்தரவு என்ன? - SAVUKKU SHANKAR CASE LATEST UPDATE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.