ETV Bharat / state

வடமாநிலப் பயணிகளே குறி.. சென்னை சென்ட்ரலில் போலி டிடிஆர் கைது! - Fake TTE in chennai central

Fake TTE in chennai central: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலப் பயணிகளை குறிவைத்து, டிக்கெட் பரிசோதகர் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 4:59 PM IST

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷாதர் அலாம் என்பவர், கடந்த ஜூன் 25ஆம் தேதி அவரது சொந்த ஊரான பீகார் செல்வதற்காக டிக்கெட் எடுக்க கவுண்டருக்குச் சென்ற போது, அங்கு ஒரு நபர் தன்னை டிக்கெட் பரிசோதகர் என அறிமுகப்படுத்தி, பீகார் செல்வதற்கு டிக்கெட் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்.

அந்த நபரின் கூற்றின் மீது நம்பிக்கை வைத்த ஷாதர் அலாம், அவரிடம் 900 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். மேலும், இரவு 10.45 மணிக்கு பீகார் மாநிலத்திற்குச் செல்லும் ரப்திசாகர் விரைவு ரயிலில் ஏற்றி விடுவதாக அழைத்துச் சென்று, பின்னர் அங்கிருந்து தலைமறைவாகியதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர், ஊருக்குச் செல்ல பணம் இல்லாமல் செய்வதறியாமல் திகைத்து நின்ற ஷாதர் அலாம், தன்னை ஏமாற்றி பணம் பெற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் கொடுங்கையூரைச் சேர்ந்த ஜிதேந்தர் ஷா என்பதும், இவர் வடமாநிலங்களுக்குச் செல்லக்கூடிய நபர்களை மட்டும் குறி வைத்து தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

அதேபோல், மக்கள் அதிகம் பயணிக்கக் கூடிய ரயில்களுக்கு மட்டும் டிக்கெட் எடுத்து தருவதாகக் கூறி, வடமாநில மக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ரயில்வே போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: "ரயில் பெட்டிகள் சரியான பராமரிப்பு இல்லாததற்கு தனியார்மயமே காரணம்" - SRMU நிர்வாகி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.