ETV Bharat / state

குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட வார்டு கவுன்சிலர்.. கமிஷனிடம் புகார் கொடுத்த நபர்.. நெல்லையில் பரபரப்பு! - Tirunelveli Municipal Corporation

Water Connection Issue: குடிநீர் இணைப்பு வழங்க 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் கமிஷன் கேட்பதாக முதியவர் ஒருவர் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Oldman complaint against Nellai 50th ward councilor who ask commission for drinking water connection
திமுக கூட்டணி கவுன்சிலர் மீது முதியவர் பரபரப்பு புகார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 12:56 PM IST

குடிநீர் இணைப்பு வழங்க கமிஷன்: திமுக கூட்டணி கவுன்சிலர் மீது முதியவர் பரபரப்பு புகார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆலியப்பா(66). இவர் பிரபல பீடி கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், ஆலியப்பா கடந்த 30 ஆண்டுகளாகச் சேமித்த சேமிப்பை வைத்து, அதே பகுதியில் அவருடைய மனைவி நாகூரம்மாள் பெயரில் வீடு ஒன்றைக் கட்டுயுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்குக் குடிநீர் இணைப்பு வேண்டி, உரிய ஆவணங்களுடன் திருநெல்வேலி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி, தொடர்ந்து அலைக்கழித்து இணைப்பு கொடுக்காமல் இருந்துள்ளனர். மேலும் கூடுதல் கட்டணமும் வசூலித்துள்ளனர்.

ஆகையால் இதுதொடர்பாக, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதை விசாரித்த நடுவர் குழு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும் எனவும், கூடுதலாக வசூல் செய்த பணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இருப்பினும், உத்தரவை அமல்படுத்த விடாமல், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரசூல் மைதீன் இடையூறு செய்து வருவதாகவும், தனிப்பட்ட முறையில் அவருக்குப் பணம் செலுத்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதாகவும், பணம் கொடுக்க விருப்பம் இல்லாததால் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்ட ஆலியப்பா மாநகராட்சியில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்வை நேரில் சந்தித்து மனு அளித்ததாகவும், அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளதாகவும், ஆனால் மாமன்ற உறுப்பினரின் உதவியாளர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு பெரிய தொகை எதிர்பார்ப்பதாகவும் முதியவர் ஆலியப்பா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் - மாமன்ற உறுப்பினர்கள் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது எனவும், தங்கள் வார்டுகளில் பணிகள் சரிவர நடைபெறவில்லை எனவும், இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.

ஆனால் மாநகராட்சி உத்தரவைப் பெற்ற பிறகும் மாமன்ற உறுப்பினர் அவரது வார்டில் உள்ள மக்களை துன்பப்படுவதும் நோக்கில் செயல்படுவது சரியா என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரசூல் மைதீனை தொடர்பு கொண்டு அவரது கருத்தைக் கேட்க முயன்ற நிலையில், அவரது செல் பேசி ஸ்விட்ச் ஆப் (Switch - off) செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம்.. ஈஸியாக நீங்களே அப்டேட் செய்வது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.