ETV Bharat / state

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் புகை பிடித்தவர் கைது! - Smoking inside flight - SMOKING INSIDE FLIGHT

Passenger Arrest for Smoking inside flight: சிங்கப்பூர் - சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்திற்குள் புகை பிடித்து ரகளை செய்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயணியைச் சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

IndiGo Flight File image
IndiGo Flight File image (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 11:15 AM IST

சென்னை: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்குள் தடையை மீறி, தொடர்ந்து புகை பிடித்த பயணியைச் சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், வழக்கம் போல் நேற்று மாலை 164 பயணிகளுடன், சிங்கப்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது. இதற்கிடையே விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணித்த பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த காமராஜ்(42) என்பவர் விமானத்திற்குள் புகை பிடித்துள்ளார்.

அதைக் கண்ட சக பயணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதோடு விமானப் பணிப்பெண்களும் பாதுகாப்பு காரணமாக விமானத்திற்குள் புகை பிடிக்க அனுமதி இல்லை என்று கூறியதோடு, பயணியிடம் கடுமையாக எச்சரிக்கவும் செய்துள்ளனர். ஆனாலும், பயணி காமராஜ் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல், கழிவறைக்குள் சென்று அங்கிருந்து ரகசியமாகப் புகை பிடித்து விட்டுத் திரும்பி வந்துள்ளார்.

இதனைக் கவனித்த விமானப் பணிப்பெண்கள் மீண்டும் பயணியை எச்சரித்தோடு, தலைமை விமானியிடம் புகார் அளித்துள்ளனர். அதையடுத்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பயணி ஒருவர் விமானத்துக்குள் புகை பிடித்து ரகளை செய்கிறார் என்று தகவல் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதும், தயாராக இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறிப் பயணி காமராஜை விமானத்தை விட்டு கீழே இறக்கியுள்ளனர். மேலும், குடியுரிமைச் சோதனை சுங்கச் சோதனை ஆகியவற்றை போலீசார் பாதுகாப்புடன் செய்து முடித்தனர்.

அதையடுத்து, பயணி காமராஜை இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் மீது, விமான பாதுகாப்பு விதிமுறையை மீறி செயல்பட்டது, தடை செய்யப்பட்ட பாதுகாப்புக்கு உட்பட்ட இடத்தில் புகை பிடித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த விமான நிலைய போலீசார் பயணியைக் கைது செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இதேபோல, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னையிலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்ட தனியார் பயணிகள் விமானத்திற்குள் புகை பிடித்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பயணியை விமான நிலைய போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விமானத்திற்குள் புகைப்பிடித்த பயணி.. மிரண்டு போன பணிப்பெண்.. அடுத்து நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.