ETV Bharat / state

கேரளாவில் வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்.. தேனி எல்லையில் தீவிர கண்காணிப்பு! - Bird flu Camp in tamil nadu - BIRD FLU CAMP IN TAMIL NADU

Bird Flu Camp In Tamil Nadu: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான கம்பம் மெட்டு, குமுளி ஆகிய சோதனைச் சாவடிகளில், தடுப்பு முகாம் அமைத்து மருத்துவக் குழுவினர் தீவிரப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

Bird Flu Camp In Tamil Nadu
Bird Flu Camp In Tamil Nadu
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 5:56 PM IST

தேனி: கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள ஏராளமான கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகள் மற்றும் வாத்துப்பண்ணைகளில் உள்ள பறவைகளை அம்மாநில கால்நடைத் துறையினர் அழித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பறவைக் காய்ச்சலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக எல்லை மாவட்டமான தேனியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் உத்தரவுப்படி, கால்நடை அரசு மருத்துவர் சிவசக்தி தலைமையில், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்களைக் கொண்ட மருத்துவக் குழுவினர், குமுளி மற்றும் கம்பம் மெட்டு சோதனைச் சாவடிகளில் பறவைக்காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவிலிருந்து வாத்து, கோழிகள் உள்ளிட்ட பறவைகளை ஏற்றி வரும் சரக்கு வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, அவை தமிழகத்துக்குள் வராமல் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும், கேரளாவிலிருந்து காலியாக வரும் அனைத்து வாகனங்களுக்கும் ஸ்பிரேயர் (Sprayer) மூலம் கிருமிநாசினி தெளித்த பிறகே தமிழக எல்லையில் அனுமதிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்! - Rupees 4 Crore Seized Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.