ETV Bharat / state

இரத்தம் சொட்டச் சொட்ட அரசு மருத்துவமனைக்கு வந்த நபர்.. சிகிச்சையளிக்காத மருத்துவர்கள்? - டீன் விளக்கம்! - Head Injury Patient Issue - HEAD INJURY PATIENT ISSUE

Asaripallam GH Head Injury Patient Issue: கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலையில் காயமடைந்து இரத்தத்துடன் வந்த நபருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Asaripallam GH Head Injury Patient Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 8:57 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சந்திரலால் (54) என்பவர், நேற்று முன்தினம் (ஏப்.24) நாகர்கோவிலில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அதன் பின்னர், அவர் இரவு சொந்த ஊருக்குச் செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார், அப்போது, அவர் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, இரத்தம் சொட்டச் சொட்ட சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலையில் அடிபட்டு ரத்தம் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், ஆம்புலன்ஸில் மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அவருக்கு உரிய முதலுதவி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் பின்பு, அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் கொண்டு வரப்பட்ட அந்த நபரின் தலையில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்த நிலையில், அவருக்கு எந்த உதவியும் செய்வதற்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் யாரும் முன்வராமல், தொடர்ந்து அந்த நபரை வந்து வந்து பார்த்துச் சென்றனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரது தலையில் இருந்து வெளியேறிய ரத்தம், அந்தப் பகுதி முழுவதும் சென்று, அங்கிருந்த சக நோயாளிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு கட்டத்தில் தன்னால் முடியாத நிலையில் அவர் இருக்கையில் சரிந்து விழுந்துள்ளார்.

இதைப் பார்த்து அங்கு இருந்த நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் அடிபட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கக் கோரி வாக்குவாதம் செய்துள்ளதாகவும், அதன் பின்னரே அந்த நபருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “வேலிகோணம் செருவலூரில் வசிக்கும் சந்திரலால் (54) என்பவர், ஏப்ரல் 24ஆம் தேதி மதியம் 1 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார்.

1 செ.மீ அளவில் அவரது தலையின் வலது நெற்றிப்பொட்டு பகுதியில் அடிபட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. ஆகையால், அவரது காயத்தில் தையல் போடுவதற்கு முயன்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அவர் மது போதையில் குழப்பமடைந்திருந்த நிலையில், அருகில் செல்லும் அனைவரையும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அடித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் அமைதியான நிலையை அடைந்ததும், அவரது காயத்திற்கு தையல் போடப்பட்டு சிகிச்சையாக்கப்பட்டு, புதிய லுங்கி மற்றும் ஆடைகள் அவருக்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து, CT ஸ்கேன் எடுத்து பரிசோதித்ததில், அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று தெரியவந்தது.

இதனை அடுத்து, அவர் நார்மல் வார்டில் இருந்து இரவு 9 மணியளவில் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவதாகக் கூறிவிட்டு டிஸ்சார்ஜ் செய்து சென்றார்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தென்காசியில் திமுக ஊராட்சித் தலைவியின் கணவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.