ETV Bharat / state

"பெரியார் ஒழிக.." எனக் கோஷமிட்ட பாஜக உறுப்பினர்; அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இடத்தில் தகராறு! - BJP vs Periyar Association

Clash Between BJP and Periyar Association: கோவில்பட்டியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக மற்றும் அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு நிலவியது.

Clash Between BJP and Periyar Association

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 3:17 PM IST

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இடத்தில் இரு தரப்பினருக்கிடையே தகராறு

தூத்துக்குடி: இந்திய அரசியல் சட்டச் சிற்பி அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்க வந்திருந்தனர். ஆனால், அங்கு ஏற்கனவே மாலை அணிவிக்க வந்திருந்த அம்பேத்கர், பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மதவாத கருத்துக்கள், மதவாத சக்திகளை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கக் கூடாது என்று கோஷம் எழுப்பினர்.

இதனால், பாஜக மற்றும் அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதைத் தொடர்ந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய போலீசார், முதலில் வந்த அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதித்தனர்.

அப்போது, மாலை அணிவித்த அவர்கள் சிலையிலிருந்து கீழே இறங்காமல் தொடர்ந்து கோஷங்களை எழுப்பத் துவங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, பாஜகவினர் மாலை அணிவிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை அணிவித்துவிட்டு கீழே வந்த பாஜக உறுப்பினர் ஒருவர் "பெரியார் ஒழிக.." எனக் கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

அதையடுத்து, கோஷமிட்ட பாஜக உறுப்பினரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இரு தரப்பினருக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனையால் பெரியார் வாழ்க, ஒழிக எனக் கோஷமிட்டுக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'பாஜக தீபத்தில் அதிமுக இணையும்..பைனாகுலரிலும் கிடைக்காத தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி' - கே.பாலகிருஷ்ணன் - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.