ETV Bharat / state

தமிழ்நாடு புராதன ஆணைய சட்டம் அமலுக்கு வருவது குறித்த அறிவிப்பை 2 மாதத்தில் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 10:23 PM IST

Tamil Nadu Antiquities Commission Act: தமிழ்நாடு புராதன ஆணைய சட்டம் அமலுக்குக் கொண்டு வருவது குறித்த அறிவிப்பை இரண்டு மாதத்தில் வெளியிட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu Antiquities Commission Act
தமிழ்நாடு புராதன ஆணைய சட்டம்

சென்னை: தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு புராதன ஆணைய சட்டத்தைத் தமிழக அரசு இயற்றியது. இந்தச் சட்டத்தின் கீழ் புராதன ஆணையத்தை அமைக்க உத்தரவிடக் கோரி இந்தியத் தேசியக் கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று (பிப்.22) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "2012ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட போதும், இதுவரை அந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டிய ஆணையத்தை அமைக்கவில்லை" என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தமிழக அரசுத் தரப்பில், "தமிழ்நாடு புராதன ஆணைய சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றும், இந்தச் சட்டத்தின் கீழ் விதிகளை வகுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், விதிகள் வகுத்த பிறகு சட்டம் அமல்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சட்டம் இயற்றி 12 ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருப்பதன் மூலம் சட்டத்தை இயற்றியதற்கான நோக்கமே வீணாகிவிடும் எனக் குறிப்பிட்டதுடன், சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், இந்தச் சட்டம் அமலுக்கு வருவது குறித்த அறிவிப்பை இரண்டு மாதத்தில் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விதிகளை வகுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்க ஏதுவாக வழக்கின் விசாரணையை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: "காடு என்றால் காடுதான்"-கொட்டு வைத்த உச்சநீதிமன்றம்: 1996ல் நீலகிரி வழக்கில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.