சென்னை : நடிகை கஸ்தூரி கடந்த 3ம் தேதி எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில் பிரமாணர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக சர்ச்சைக்குள்ளான வகையில் பேசி இருந்தார்.
இதையடுத்து நடிகை கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் முன்னேற்றபடை தலைவர் வீரலட்சுமி உட்பட பல்வேறு தரப்பினர் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இவ்வாறு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வந்ததையடுத்து நடிகை கஸ்தூரி சமுகவலைத் தளம் மூலமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : "தமிழர்கள்-தெலுங்கர்கள் இடையே ஒற்றுமையை குலைக்கும் நடிகை கஸ்தூரி"-தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி பேட்டி
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பார்த்ததாகவும், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்பிடையில், எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதம், இனம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தவறான வதந்திகளை பரப்புவது மொழி, பிராந்திய குழுக்கள் இடையே பகை உணர்வு ஏற்படும் வகையிலும், கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுவது, உள்ளிட்ட 192, 196(1)(a), 353(1)(b) and 353(2) BNS ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்