ETV Bharat / state

காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்.. ராஜபாளையம் அருகே துயரம்..! - LOVE FAILURE SUICIDE

ராஜபாளையம் அருகே காதல் தோல்வியால் 20 வயதேயான வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலத்தை மீட்டு செல்லும் போலீசார்
சடலத்தை மீட்டு செல்லும் போலீசார் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 1:57 PM IST

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள எண் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மனைவி லட்சுமி. மில் கூலித் தொழிலாளியான இவர்களுக்கு சுதாகர் (21), மூர்த்தி (20) என இரு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் சுதாகர் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகன் மூர்த்தி தனியார் பேருந்து கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை 5.30 மணி அளவில், நல்லம நாயக்கன்பட்டி ரயில்வே கேட் அருகே, ரயிலில் அடிபட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் இருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் விரைந்து சென்ற போலீசார் தலை மற்றும் உடல் தனியாக இருந்த பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: மருத்துவரிடம் பிழைத்து வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டி... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்கும் கோர்ட்!

விசாரணையில் சிங்கராஜ் என்பவரது இரண்டாவது மகன் மூர்த்தி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மூர்த்தி அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும், இது குறித்து பெற்றோரிடம் கூறி சம்மதம் வாங்க முயற்சித்துள்ளார். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதனால் மூர்த்தியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த மூர்த்தி நேற்று மாலை 5:30 அளவில் கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து இருந்து சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில் முன் பாய்ந்து இறந்துள்ளார்.

20 வயதான மூர்த்தி திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்க மறுத்ததன் காரணமாக, உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதுகுறித்து மூர்த்தியின் தந்தை சிங்கராஜ் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.