ETV Bharat / state

கோவையை புறக்கணிக்கிறதா திமுக? - கனிமொழி எம்.பி.யின் பதில் என்ன? - நாடாளுமன்ற தேர்தல் 2024

MP Kanimozhi: கோவை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடியும், சாலைகளுக்கு 300 கோடியும், குடிநீருக்கு 790 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என கோவை புறக்கணிக்கப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எம்.பி கனிமொழி பதில் அளித்தார்.

எம்.பி கனிமொழி செய்தியாளர் சந்திப்பு
எம்.பி கனிமொழி செய்தியாளர் சந்திப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 10:25 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் பீளமேடு, அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் எம்.பி கனிமொழி தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசுகையில், "முதலமைச்சரின் கட்டளைக்கு இணங்க கன்னியாகுமரியில் தொடங்கி மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கோரிக்கைகளையும் பெற்று வருகிறோம். அதே சமயம் தொழில அமைப்புகள், விவசாயிகள், பல்வேறு சங்கங்கள் உள்ளிட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறோம். மக்களும், தொழில் அமைப்பினரும் எங்களை சந்தித்து வருகின்றனர்.

கோவையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் தொழில அமைப்பினர் குறிப்பாக, சிறு குறு தொழில் செய்பவர்கள் கடந்த காலகட்டத்தில் இருந்து பிரச்சனை சந்தித்து வருகின்றனர். பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா போன்ற காலங்களிலும் பிரச்சினைகள் தொடர்கிறது. சிறு குரு தொழில் அமைப்பினர் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஜி.எஸ்.டியில் நிறைய சிக்கல்கள் உள்ளது. அதை கட்ட முடியாமல் சிறு குறு அமைப்பினர் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைகளில் இருப்பதாகவும் கோரிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர்.

இவை அனைத்தும் தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்வோம். ஜி.எஸ்.டியில் இருக்கும் குழப்பங்கள் தீர்க்க வேண்டும், தொழில்துறையினர் தொழில் செய்வதற்கான உள்கட்டமைப்பு போன்ற வசதிகள் அடங்கிய கோரிக்கைகள் அதிக அளவில் இருந்தது. மேலும் மின் கட்டணம் உயர்வை செவி சாய்க்காமல் இல்லை, பலமுறை அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். கோரிக்கைகளை ஒரே நேரத்தில் சரி செய்ய முடியாது.

கோவைக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை செய்ய முடியாமல் போனதற்கு மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டதன் காரணம். ரயில்வே துறையில் கூட திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. நிதி குறைவாகவே ஒதுக்கியதால் திட்டங்களை செய்ய முடியவில்லை.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நாளை விளையாட்டு துறை அமைச்சர் ஆயிரம் கோடி மதிப்புள்ளான குடிநீர் திட்டத்தை திறந்து வைப்பதற்காக வருகிறார். கோவையை புறக்கணிக்கவில்லை பல தொழிற்சாலைகளுக்கு கோவை மையமாக உள்ளது. கோவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் இங்கு தொழில் கூடங்கள் உருவாக்கினார். பல பன்னாட்டு நிறுவனங்கள் கோவை வருவதற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், முதலீடுகளை கொண்டுவருக்கு பணி செய்து வருகிறார்.

தொழிலாளர்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்லூரிகளில் நம்முடைய பிள்ளைகள் படிக்க முடியாத அளவிற்கு நீட் என்கிற ஒரு தேர்வை வைத்துள்ளனர். சாதாரண குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் படிப்பதற்கு, இந்தியாவிலேயே அதிகமான மருத்துவ கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

மாநிலம் தோறும் மாவட்ட தோறும் கல்லூரி வேண்டுமென திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. இந்த கல்லூரியில் யாருக்காக கொண்டுவரப்பட்டதோ அந்த கல்லூரியிடம் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது. அதை விமர்சிக்க முடியாதவர்கள் ஏன் இதைப் பற்றி பேச மறுக்கிறார்கள்" என்றார்.

தொடர்ந்து, கோவையை திமுக புறக்கணிப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், "மெட்ரோ திட்டத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடியும், சாலைகளுக்கு 300 கோடியும், குடிநீருக்கு 790 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு புறவழிச் சாலைக்கு 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் செய்து வருகிறோம்" என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெற்றோருக்கு பணம் அனுப்புவதை நிறுத்திய மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.