ETV Bharat / state

தாம்பரம் பகுதியில் போலீஸ் கஞ்சா வேட்டை.. மாணவர்கள் உட்பட எட்டு பேர் கைது..!

தாம்பரம் வட்டாரத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் நடந்த போலீசாரின் கஞ்சா வேட்டையில், மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் போலீஸ் கஞ்சா வேட்டை
தாம்பரம் போலீஸ் கஞ்சா வேட்டை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 10:45 AM IST

சென்னை: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி அருகே உள்ள விடுதிகளை வாடகை எடுத்து தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் மற்றும் அறைகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை மாணவர்கள் பயன்படுத்துவதாக தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல்கள் சென்றுள்ளது. மேலும், சிலர் போதை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், நேற்று தாம்பரம் மாநகர காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் 28 இடங்களில் நேற்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: நடிகை கஸ்துாரி சர்ச்சை: குறிப்பிட்ட சமூகத்தினரை ஊழல்வாதிகள் என்பதா? வலுக்கும் கண்டனம்!

இந்த சோதனையில் கல்லூரி மாணவர்களுக்கு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து, பல்லாவரம் பகுதியில் உள்ள விடுதியில் சோதனை நடத்திய போது, சூடான் நாட்டைச் சேர்ந்த போதை பொருளை விற்பனை செய்யும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முகமது அல்ஸ்மானே (28), முகமது ஹைதியம் ஆகியோர் என தெரிய வந்தது.

இதில் அல்ஸ்மானே என்பவரது விசா காலாவதியாகிய பின்பும் சட்ட விரோதமாக இங்கு தங்கி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சேலையூர் பகுதிகளில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதியில் சோதனை நடத்திய போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை ரயில் மூலம் வாங்கி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்தும் பயன்படுத்தி வந்ததும் தெரிந்தது.

போலீசாரின் சோதனையில் சிறிய அளவில் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசி, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடீரென நேற்று காலை முதல் போலீசார், கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் சோதனை நடத்திய சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.